24 ஏப்ரல், 2010

செக்ஸ் ஆராய்ச்சிக்காக அமெரிக்க பெண்ணை மயக்கிய நித்யானந்தா; கணவரை பிரிந்து ஆசிரமத்தில் அடைக்கலம்





பெங்களூரில் ஆசிரமம் நடத்திய சாமியார் நித்யானந்தா நடிகைகளுடன், பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும், மோசடி, மிரட்டல் புகாரிலும் கைது செய்யப்பட்டார். இமாசலபிரதேசத்தில் இருந்து பெங்களூர் கொண்டு வரப்பட்ட அவரிடம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடக்கிறது. முன்னதாக நித்யானந்தாவின் ஆசிரமத்தை சோதனையிட்ட போலீசார் ஏராளமான தஸ்தாவேஜுகளை பறிமுதல் செய்தனர். அதில் நித்யானந்தா தனது ஆசிரமத்துக்கு வந்து தீவிர பக்தர்களாக மாறுபவர்களிடம் செக்ஸ் ஒப்பந்தம் போட்டு இருந்தது தெரியவந்தது.

10 பக்கங்கள் கொண்ட அந்த ஒப்பந்தத்தில் கடைசி இரண்டு பக்கங்களில் செக்ஸ் ஆராய்ச்சிக்கு தேவைப்படும்போது உறவு வைத்துக் கொள்ள நேரிடலாம். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. மேலும் அந்த ஒப்பந்தம் குறித்து எந்த சூழ்நிலையிலும் வெளியில் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு இருந்தது.

நித்யானந்தா மீது முன்பு புகார் கூறப்பட்டபோதும் கூட அவர் நான் தவறு செய்யவில்லை. செக்ஸ் ஆராய்ச்சிக்காக உறவில் ஈடுபட்டேன் என்று கூறியிருந்தார். அதன்படி அவர் இந்த ஒப்பந்தம் போட்டு செக்ஸ்சில் ஈடுபட்டிருக்கிறார்.

ஆண்-பெண் பரவச நிலை மற்றும் நிர்வாண நிலை, ஆன்மீகம், மகிழ்ச்சி, சுதந்திரத்தை அதிகரிக்கும் வகையில் செக்ஸ் உறவில் ஈடுபடுவது, பழங்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட தந்திர கலை கற்பது என்று செக்ஸ் பற்றி பல்வேறு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறார்.

செக்ஸ் ஆராய்ச்சிக்காக நித்யானந்தா 5 பெண்களுடன் உறவு கொண்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ “கிளிப்பிங்ஸ்” ஆதாரங்கள் பெங்களூர் போலீசாரிடம் சிக்கியுள்ளன.

சாமியாரின் லீலையில் அமெரிக்க பெண் ஒருவரும் சிக்கியுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப்பெண்ணான அவர் சாமியாரின் செக்ஸ் ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார். அவரது பெயரை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

அவர் கணவருடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்குள்ள நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தார். அவரது கணவர் டெல்லியைச் சேர்ந்தவர் இவரும் என்ஜினீயராக அமெரிக்காவில் வேலை பார்த்தார்.

3 வருடத்துக்கு முன்பு நித்யானந்தா அமெரிக்கா சென்றபோது முதல் முறையாக அந்த பெண் வந்து சந்தித்து பக்தை ஆனார். அடிக்கடி அமெரிக்காவில் உள்ள ஆசிரமம் சென்றார். பின்னர் இந்தியாவுக்கு வந்து பெங்களூர் ஆசிரமத்தில் தங்கினார். இதற்காக தனது சொத்து, சுகம், உறவினர்கள் என அனைத்தையும் இழந்தார்.

நித்யானந்தா ஆசிரமத்தில் சாமியாருக்கு நெருக்கமானவர்களில் ஒருவரானார். இதனால் அவரை கணவர் விவாகரத்து செய்தார். வேலையையும் இழந்து நித்யானந்தாவுடன் தங்கி இருந்தார். நித்யானந்தா அந்த பெண்ணை சமீபகாலம் வரை தனது செக்ஸ் ஆராய்ச்சிக்காக பயன்படுத்திக் கொண்டார்.

மேற்கண்ட விவரங்களை பெங்களூர் சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

நித்யானந்தாவின் செக்ஸ் ஆராய்ச்சி ஒப்பந்தம் பற்றி அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அமெரிக்காவை சேர்ந்த பக்தர் டக்லஸ் மெக்கெல்லர் என்பவர் கலிபோர்னியா கோர்ட்டில் நித்யானந்தா மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நித்யானந்தா இயற்கைக்கு மாறாக உறவு கொண்டது பற்றியும், பல்வேறு மோசடிகள் பற்றியும் புகார் கூறியிருந்தார்.

டக்லஸ் தனது பெயரை நித்யா பிரபா என பெயரை மாற்றிக் கொண்டு அமெரிக்க ஆசிரமத்தில் பணியாற்றினார். அப்போது நித்தயானந்தா தனி அறையில் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்ததாகவும் புகாரில் கூறியிருந்தார். இதுபற்றியும் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்
இதற்கிடையே நித்யானந்தாவிடம் போலீசார் இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார்கள்.

நித்யானந்தாவிடம் கைப்பற்றப்பட்ட லேப்டாப் கம்ப்யூட்டரில் சில தகவல்கள் “லாக்” செய்யப்பட்டுள்ளதால் அவற்றை போலீசார் தெரிந்து கொள்ள முடியவில்லை.

அந்த லேப்டாப் மற்றும் சிடி ஆவணங்கள், டிஸ்குகள் ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு நிபுணர்கள் மூலம் அவை திறந்து பார்க்கப்படுகின்றன.

நித்யானந்தா வைக்கப்பட்டுள்ள சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு சைபர்கிரைம் பிரிவும் உள்ளது. பாதுகாப்பு கருதி வருகிற 26-ந்தேதி வரை பொதுமக்கள் யாரும் சைபர்கிரைம் பிரிவில் புகார் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வரும் பொது மக்கள் புகார் கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக