மிகக்கூடிய அந்நிய செலாவணி
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளினால் கடந்த வருடம் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் (33000 கோடி ரூபா) அந்நிய செலாவணியாக கிடைத்துள்ளது.
வெளிநாட்டில் வேலை செய்வோர் இலங்கைக்கு அனுப்பியுள்ள மிகவும் அதிகமான அந்நிய செலாவணி இதுவாகும். 2008ம் ஆண்டு வெளிநாடு களில் வேலை செய்பவர்கள் இலங்கைக்கு அனுப்பிய அந்நிய செலாவணி 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
தற்போது 18 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைபார்த்து வருவதாகவும், இவர்களில் அநேகமா னோர் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்வதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் செயலாளர் சுசில் எஸ் சிரிசேன தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் பணியகத்தின் பிராந்திய அலுவலகத்தையும் பயிற்சி நிலையத்தையும் திறந்து வைத்து பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார். பணியகம் இவ்வருடம் இதுவரை திறந்துள்ள 27வது இணை அலுவலகம் இதுவாகும். வவுனியா மேயர் என்.என்.கே.நாதன் இங்கு உரையாற்றுகையில், பிரதேசத்தில் உள்ள இளைஞர்களுக்கு சிறந்த வழி காட்டலுடன்னும் முறையான பயிற்சி யுடனும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள இது சிறந்த தருணமாக அமைகிறது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக