14 டிசம்பர், 2010

வடக்கு முகாம்களில் உள்ள மக்களுக்கு 45 மில்லியன் ரூபா செலவில் உலர் உணவு வழங்க ஏற்பாடு



வடக்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு 45 மில்லியன் ரூபா செலவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குயேற்ற அமைச்சர் குணரத்தன வீரக்கோன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம்,வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய முகாம்களில் உள்ள மக்களுக்கே இப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

இம்மாதம் 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ய உள்ள மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோண் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு இப் பொருட்களை நேரடியாக அவர்களின் கையிலேயே வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆறு நாட்கள் விஜயம் மேறகொண்டு செல்லும் மீள்குடியேற்ற அமைச்சர், 10 ஆயிரம் பொதிகளை கொண்ட பருப்பு, மாவு, அரிசி, சீனி உள்ளிட்ட பாய், தலையனை முதலான பொருட்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக