வடபகுதி நோக்கி சுற்றுலாப் பயணிகளாகப் படையெடுத்து வருகின்றனர். தினமும் யாழ்.குடாநாட்டிற்கு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இவ்வாறு வருவதாக யாழ் மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு அதிக அளவில் வரும் சுற்றுலாப் பயணிகளைச் சமாளிக்கக்கூடிய வசதிகள் குடாநாட்டில் இல்லை எனவும் இதனால் வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போர் முடிந்த பின்னர் உருவாகியிருக்கும் புதிய சூழலில் சுற்றுலாப்பயணிகளாக வடபகுதிக்குப் பெருமளவில் சிங்கள மக்களும் புலம்பெயர் நாடுகளில் இருந்து தமிழ் மக்களும் வந்தவண்ணம் இருக்கின்றனர்.இதனால் குடாநாட்டில் சனத் தொகை திடீரென அதிகரித்திருக்கிறது.
திடீரென அதிகரித்திருக்கும் சனத்தொகைப் பெருக்கத்தினால் போக்குவரத்து நெருக்கடிகளும் நகரப் பகுதியில் எதிர்பாராத வகையிலான சனநெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கடைகளிலும் சந்தைகளிலும் பொருட்களின் விலையும் அதிகரித்திருக்கின்றன. இதனால் உள்ளூர் உணவுப்பொருட்கள், பழங்கள், கைவினைப்பொருட்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளாக வருகின்றவர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பிரதேசங்களுக்கும் சென்று வருகின்றனர். அத்துடன் குடாநாட்டில் அதிகளவிலான கோவில்களின் திருவிழாக்காலம் இது என்பதால் பிரசித்தி பெற்ற கோவில்களிலும் கூட்டம் அதிகமாகவே காணப்படுகின்றது.
குடாநாட்டில் இப்படி நெருக்கடி அதிகரித்திருப்பதற்குக் காரணம் நடைபெற்ற போரின் காரணமாக பெருமளவு பிரதேசங்கள் சிதைந்திருப்பதும் நீண்டகாலமாக அபிவிருத்திகள் எதுவும் நடைபெறாமையுமே என்று யாழ். செயலகத்தின் திட்டமிடற் பிரிவைச் சேர்ந்த பொறுப்பு வாயந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் வசதி குறைந்த சாதாரண வீடுகளுக்கு அதிக வாடகை கொடுத்து அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
இந்த விடுதிகள் யாழ்ப்பாண நகர், நகருக்கு வெளியேயான மானிப்பாய், பண்டத்தரிப்பு, சுன்னாகம், கொக்குவில், கோண்டாவில், மல்லாகம், சாவகச்சேரி, உரும்பராய், ஊர்காவற்றுறை, வேலணை, பருத்தித்துறை, நெல்லியடி, மீசாலை, பளை போன்ற இடங்களில் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக