30 ஆகஸ்ட், 2010

கல்வித்துறை அபிவிருத்தி; சிறுவர் மேம்பாடு வடக்கு கிழக்கில் முன்பள்ளி ஆசிரியருக்கு நம்பிக்கை நிதியம்


வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகளை வழங்கும் பொருட்டு ((இஏஐகஈதஉச பதமநப ஊமசஈ) சிறுவர் நம்பிக்கை நிதியம் ஒன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர் மானித்துள்ளது.

இந்த நிதியத்தை ஸ்தாபிப்பதற் காக அமைச்சரவை அங்கீகாரம் கிடை க்கப் பெற்றுள்ளதாக சிறுவர் மேம் பாட்டு மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்த நிதியத்திற்கு முதற் கட்ட மாக (நஅயஉ பஏஉ இஏஐகஈதஉச) சேவ் த சில்ரன் அமைப்பு 100 மில் லியன் ரூபா நிதியை வழங்கியு ள்ளதாக தெரிவித்த அவர், வெகு விரைவில் இது ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிதியத்திற்காக பல்வேறு அமைப்புகளிடமிருந்து நிதியுதவிக ளைப் பெறவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர், இதற்காக திறைசேரியும் அனுமதி வழங்கியுள் ளது என்றும் குறிப்பிட்டார்.

மாதாந்தம் 2000 ரூபாவை கொடுப் பனவாக வழங்க திட்டமிட்டுள்ளது டன் முதற்கட்டமாக 500 முன்பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளனர் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கிலு ள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுவர் மேம்பாட்டு, மகளிர் விவ கார அமைச்சின் கீழ் உள்ள சிறுவர் செயலகத்தின் ஊடாக பயிற்சிகள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற் கட்டமாக கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 15ற்கும் மேற்பட்ட பகுதிகளில் முற்றிலும் இல வசமாக வதிவிட பயிற்சிகள் வழங்கப் பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள் ளன. இவ்வாறு சான்றிதழ்கள் வழ ங்கப்படுபவர்களுக்கே மாதாந்தம் கொடுப் பனவுகளும் வழங்க தீர்மானிக்கப்பட் டுள்ளது.

ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் 50 முன்பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொழும்பிலிருந்து துறைசார் வளவாளர்கள், விரிவுரையாளர்கள் அழைத்து வரப்பட்டு திட்டமிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

வடக்கு, கிழக்கின் கல்வித் துறையின் அபிவிருத்தியையும் சிறுவர் மேம்பாட் டையும் கருத்திற் கொண்டே தமது அமைச்சு இந்த நிதியத்தை புதிதாக ஸ்தாபித்து அதன் மூலம் கொடுப்பனவு களை வழங்க திட்டமிட்டுள்ளது என்றார்.

அடுத்த கட்டமாக வட மாகாணத் திலும் இந்த பயிற்சி பட்டறைகளை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன என்றும் அவர் மேலும் தெரி வித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக