30 ஆகஸ்ட், 2010

கிளிநொச்சியில் 54,000 ஏக்கரில் நெற்செய்கை விவசாயிகளுக்கு இலவச விதைநெல் வயல் பண்படுத்தலுக்கு 8000 ரூபா






இவ்வாண்டின் பெரும் போகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 54,000 ஏக்கரில் நெற்பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது டன் இதற்கான சகல உதவிகளையும் அரசாங்கம் விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுக்கவுள்ளது.

விவசாயிகளுக்கான விதை நெல்லை இலவசமாக வழங்குவதுடன் ஒரு விவசாயக் குடும்பத்திற்கு தலா இரண்டு ஏக்கர் வயலை உழுவதற்கான 8,000 ரூபாவையும் அத்துடன் உரமானியத்தையும் அரசாங்கம் வழங்குவதென தீர்மானிக் கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கிளிநொச்சியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற மாவட்டத் திற்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய இக் கூட்டத்தில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, பி. தயாரத்ன, சம்பிக்க ரணவக்க, வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் திவாரட்ன, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உட்பட உயர் மட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

பல வருடங்களுக்குப் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் முழுமையான, நெற்பயிர்ச்செய்கைக்கு வழி வகுத்தல், சேனைப் பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல், மீள்குடியேற்ற நடவடிக்கை, வீடமைப்பு, கண்ணிவெடி அகற்றலை விரைவுபடுத்தல், யுத்தத்தினால் பாதிப்படைந்த அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைக் கட்டிடங்களைப் புனரமைத்தல் உட்பட அடிப்படைப் பொதுவசதிகள் தொடர்பில் இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டு ள்ளது.

இது தொடர்பில் குறிப்பிட்ட கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மேற்படி விடயங்களை விரைவுபடுத்துதல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன் சம் பந்தப்பட்ட அதிகாரிகளின் கருத்துக்களும் ஆலோச னைகளும் இது தொடர்பில் பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மீள் குடியேற்றப்பட்டுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் அவர்களுக்கான வீடமைப்பு தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்; யுத்தத்தினால் பாதிக்கப்பட் டோருக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பில் ஆராய்வ தற்காக இந்திய விசேட குழுவொ ன்றும் நேற்று முன்தினம் கிளி நொச்சிக்கு விஜயம் செய்திருந்ததாக வும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக