2 ஏப்ரல், 2010

மஹியங்கனையில் உணவு விஷமானது குறித்து விசாரணைகள் ஆரம்பம்





மாலை உணவு விஷமானதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 380 பெண்களில் தற்போது 33 பேர் மாத்திரம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் ஏனையோர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மஹியங்கனை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் 33 பேரும் தொடர்ச்சியான வாந்தி காரணமாக உடல்பலவீனமடைந்து காணப்படுவதால் சிகிச்சைபெறுவதாகத் தெரிவித்த அவர்,இன்று நண்பகலிற்குபின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கவுள்ளாதாகவும் தெரிவித்தார்.

மஹியங்கனை ஆடைத்தொழிற்சாலையில் உணவு விஷமானது தொடர்பில் புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் , கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உஉணவு மாதிரிகள்தொடர்பான அறிக்கைகள் இன்னமும் 2 நாட்களில் கிடைக்கும் எனவும் மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 380 பெண் தொழிலாளர்கள் வாந்தி,தலைவலி போன்ற உபாதைக்களுக்கு ஆளாகியிருப்பதுடன் இரவு உணவு மீன் கறியில் காணப்பட்ட நச்சுத்தன்மை தான் விஷமானத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வழங்கப்பட்ட உணவுடன் குடி நீர் போன்றவற்றின் மாதிரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக