2 ஏப்ரல், 2010

எதிரிகளை நாசமாக்கும் போர்க்கப்பல் 'சென்னை': கோலாகலமாக துவக்கம்






மும்பை : எதிரிகளை தாக்கி அழிக்கும் போர்க்கப்பல் 'சென்னை' துவக்க விழா, மும்பையில் நேற்று கோலாகலமாக நடந்தது.

கடந்த 2008ல் கடல் வழியாக மும்பையில் நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள், தாஜ் உட்பட முக்கிய ஓட்டல்களில் தாக்குதல் நடத்தினர். இதில், 160க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர். இதையடுத்து, கடற்கரை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. கடல் வழியாக நாட்டுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டியது அவசியம். அதற்கென கடற்படையில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் என, ராணுவ அமைச்சர் அந்தோணி இவ்விழாவில் கூறினார். மேலும் அதிநவீன வசதி கொண்ட போர்க்கப்பல்களை குறுகிய காலத்தில் எல்லா திறன்களுடன் இந்தியாவே தயாரிக்கும் காலம் வந்து விட்டது; அன்னிய நாடுகளை நம்பியிருக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், மும்பை, மசகானில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் வடிவமைக்கப்படும் எதிரிகளை தாக்கி அழிக்கும் 'சென்னை' போர்க்கப்பலை, கடற்படை தலைமை தளபதி நிர்மல் வர்மா நேற்று பார்வையிட்டார். கடற்படையிடம் ஒப்படைக் கப்பட்ட 6,700 டன் எடையுடைய இந்தக் கப்பல், எதிரி முகாம்களை ரகசியமாக கண்காணித்து அழிக்கக்கூடிய அதிநவீன மூன்றாவது போர்க்கப்பலாகும். ராணுவ தளவாடங்கள் பொருத்தப்பட்டு, வரும் 2013ல் இந்திய கடற்படையில் தனது பணியை துவங்கும். இது குறித்து வர்மா கூறுகையில், 'இந்திய வரலாற்றில் இந்த நாள் மிகவும் முக்கியமான நாள். இந்த போர்க்கப்பலுடன் பிரமோஸ் ஏவுகணை பொருத்தப்படும். இதன் மூலம் எதிரிகளின் இலக்குகளை எளிதாக அழிக்க முடியும்' என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக