2 ஏப்ரல், 2010

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்புனரமைப்பு: இலங்கைக்கு உதவி





கொழும்பு:'இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்பு பணிகளுக்கு, இந்தியா தொடர்ந்து உதவும்' என, இந்தியா தெரிவித்துள்ளது.இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் கே கந்தா கூறியதாவது:இலங்கையில் நீண்ட காலமாக நடந்து வந்த உள் நாட்டு போரால், வடக்கு பகுதி கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. அங்கு தற்போது முழு வீச்சில் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன.இந்த பணிகள், தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. புனரமைப்பு பணிகளுக்காக இந்தியா ஏற்கனவே பல்வேறு உதவிகளை அளித்துள்ளது. இந்த விஷயத்தில், இலங்கைக்கு தேவைப்படும் உதவிகளை தொடர்ந்து வழங்க, இந்தியா தயாராக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நெருங்கிய நட்பு உள்ளது.இவ்வாறு அசோக் கே கந்தா கூறினார்.

போரால் சேதமடைந்த வீடுகளை சீரமைப்பதற்காக, இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட சிமென்ட் மூட்டைகளையும், இலங்கை அதிகாரிகளிடம், இந்திய தூதர் ஒப்படைத்தார். இந்தியா சார்பில் நான்கு லட்சம் சிமென்ட் மூட்டைகள் வழங்கப்படவுள்ளன.இலங்கையின் வடக்கு பகுதிகளுக்கு இந்த சிமென்ட் மூட்டைகள் விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதன்பின்னர், அங்குள்ள மக்களுக்கு இது வழங்கப்படும் என, இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக