மாகாண சபை உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா
தேர்தல் ஒன்று இருக்கும் போது மாத்திரம் அன்றி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களுடன் வாழ்வதே தமது அரசியல் செயற்பாடு என மாகாண சபை உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
தாம் எப்பொழுதும் மக்களுடன் வாழுகின்ற ஒரு நபர் என்ற காரணத்தினாலேயே கொழும்பு மாவட்ட மக்கள் தம்மை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலன்னாவை பிரதேசத்தில் அண்மையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
“நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது தான் எனது அரசியல், ஜனாதிபதியின் இரு கரங்களையும் பலப்படுத்த அவருடன் இணைந்தமையானது, அவர் சிறந்த தலைமைத்துவத்தை வழங்குகிறார் என்பதனால் தான்.
ஐக்கிய தேசிய கட்சிக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இன்று நாடு தொடர்பாக எதிர்கால நோக்கு ஒன்று இல்லை. ஒருநாளுக்கான தேவையை பூர்த்தி செய்து கொண்டு வாழும் அரசியலைத் தான் அவர்கள் மேற்கொள்கிறார்கள்.
அதன் மூலம் இந்த நாட்டிற்கும், எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு பயனும் வரப்போவதில்லை. நாட்டை தெடர்ந்து படுகுழிக்குள் இழுத்துச் செல்வதையே இந்த பாரம்பரிய எதிர்க்கட்சி செய்கிறது.
இப்போது பாருங்கள்!! யுத்தம் காரணமாக அபிவிருத்தி நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டதா? நாட்டிற்காக இந்த அரசாங்கம் நாளாந்தம் ஏதேனும் ஒரு அபிவிருத்தி செயற்றிட்டத்தை செயற்படுத்துகிறது.
ரன்மிஹிதென்ன மஹிந்த ராஜபக்ஷ டெலி சினிமா திரைப்பட கிராமம் போன்ற ஒன்றை யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா? மேம்படுத்தப்படாத பாதையொன்று உள்ள கிராமம் ஒன்றை காண முடியுமா? ஜனாதிபதியின் முறையான தலைமைத்துவம் காரணமாகவே இவை அனைத்தும் உரிய வகையில் இடம் பெறுகின்றன.
பொது மக்களின் இதயத்துடிப்பை அறிந்த மக்களுடன் வாழ்கின்ற எங்களுக்கும் ஜனாதிபதி மேன்மையான ஆசீர்வாதத்தை வழங்குகிறார். குறுகிய இலாபம் தேடும் அரசியல் எமது குறிக்கோள் அல்ல. நாம் பிரதிநிதித்துவப்படும் மாவட்டத்திற்கு சேவையாற்றுவதே எமது குறிகோளாக இருக்கின்றது.
கொழும்பு மாவட்டத்தில் அனைத்து மக்களும் பேதங்களை மறந்து எங்களுடன் இணைந்திருப்பது அதனால் தான் என மாகாண சபை உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக