2 ஏப்ரல், 2010

நித்யானந்தா வழக்கு விசாரணை: ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக திடீர் பரபரப்பு;



திரைப்படம் திரைப்படம்
நித்யானந்தா சாமியார், நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் ஒன்றாக இருந்தது தொடர்பாக தமிழக, கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கை சி.பி.ஐ. ஏற்று நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் கார்த்திகேயன் மனு செய்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக நடிகை ரஞ்சிதா நேரில் இன்று சென்னை ஐகோர்ட்டுக்கு வந்து ஆஜராகி சில விளக்கங்களை அளிக்கப் போவதாக திடீரென ஒரு தகவல் பரவியது. இதனால் வக்கீல்களும், நிருபர்களும் பரபரப்பு அடைந்தனர்.

ரஞ்சிதா வரப்போகிறார் என்ற தகவல் சிறிது நேரத்தில் ஐகோர்ட்டு முழுவதும் பரவி விட்டது. எல்லாரும் ரஞ்சிதா வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆங்கில தொலைக்காட்சி நிருபர்கள் காமிரா மேன்களுடன் அவசரம், அவசரமாக வந்து சேர்ந்தனர். ஒரு ஆங்கில சானல் ரஞ்சிதாவின் ஐகோர்ட்டு வருகையை நேரடி ஒளிபரப்பு செய்யவும் தயாராகி விட்டது. பிறகு தான் தெரிந்தது, அது ஏப்ரல்-1 முட்டாள்கள் தின தகவல் என்று. ச்சே... யாரப்பா... இப்படி வதந்தியை கிளப்பி விட்டது என்றபடியே ரஞ்சிதாவை எதிர்பார்த்தவர்கள் கலைந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக