3 மார்ச், 2010

புலிகள் பிரமுகர் கொழும்பில் கைது



கொழும்பு:விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதித் துறை விவகாரங்களை கவனித்து வந்த முக்கிய பிரமுகர் கொழும்பில் கைது செய்யப்பட்டார்.விடுதலைப் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் இலங்கையில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் சர்வதேச விவகாரங்களை கவனித்து வந்த "கேபி'யும், இலங்கை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், புலிகள் அமைப்பின் சர்வதேச அளவிலான நிதித் துறை விவகாரங்களை கவனித்து வந்த முக்கிய பிரமுகர் ஒருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுகுறித்து, இலங்கை குற்ற நடவடிக்கைள் விசாரணைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஜெனீவாவில் இருந்தபடி, புலிகளின் நிதித் துறை விவகாரங்களை கவனித்து வந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 10ம் தேதி இவர் கொழும்பு வந்தார். புலிகளுக்கு சொந்தமான தொழில் விவகாரங்களை கண்காணிப்பதற்காக இவர் கொழும்பு வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.அவரின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்ய பட்டுள்ளது. இலங்கை குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களை அவர் கொடுத்துள்ளதும் தெரியவந்துஉள்ளது. இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக