3 மார்ச், 2010

தனுன திலகரட்ணவின் வங்கி பெட்டகங்களுக்கு
ரூ. 71/2 கோடி பணத்தை ஏற்றி வந்த கறுப்புநிற பிடிபெஃண்டர்பீ சிக்கியது

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்னவின் தாயா ரான அசோக திலகரட்னவின் தனியார் வங்கி பெட்டகங்களில் காணப்பட்ட 7 1/2 கோடி ரூபா உள்ளூர் மற்றும் வெளி நாட்டு பணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் இரகசிய பொலிஸார், குறிப்பிட்ட பணத்தை வங்கிக்கு எடுத்து வந்ததாக கூறப்படும் கறுப்பு நிற டிபென்டர் வாகனமொன்றை கைப்பற்றியுள் ளனர்.

இந்த கறுப்பு நிற டிபென்டர் வாகனம் தனுன திலகரட்னவினால் அவரது நெருங்கிய நண்பரொருவரின் பெயரில் 2008 பெப்ரவரி 14 ஆம் திகதி இராணுவ ஏல விற்பனையின் போது வாங்கப்பட் டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. வாகனம் வாங்கப்பட்ட அந்த தினத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ ஏல விற்பனையின் போது இந்த கறுப்பு டிபென்டர் வாகனம் எவ் வாறு வாங்கப்பட்டது என்பது தொடர்பாக விசேட ரகசிய பொலிஸ் குழுவொன்று விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை 7 1/2 கோடி ரூபா நிதி தொடர்பாக தனுன திலகரட்னவின் தாயாரான அசோக திலகரட்ன கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை பிணையில் செல்ல மேல திக மாவட்ட நீதிபதி அனுமதி வழங்கினார்.

அத்துடன் குறிப்பிட்ட பணம் வைக்கப்பட்டிருந்த வங்கிப் பொட் டகங்கள் இருந்த தனியார் வங்கியின் முகாமையாளர் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளில் இரகசிய பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ரகசிய பொலி ஸார் அனுமதி கோரினர். நீதிபதி அதற்கு அனுமதி வழங்கினார்.

தனியார் வங்கியின் பெட்டகங் களில் இருந்து கைப்பற்றபட்ட மேற் படி பணம் தொடர்பாக அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டத் தின் கீழ் விசாரணைகள் நடைபெறு வதாகவும் இந்த பணம் பயங்கர வாத நடவடிக்கைகளுக்கு பயன்படு த்தப்பட்டதா என்பது பற்றியும் விசாரிக்கப்படுவதாக ரகசிய பொலி ஸாரின் சார்பாக வாதாடிய இன் ஸ்பெக்டர் மொஹான் மாசிம்புலா தெரிவித்தார்.

வங்கிப் பெட்டகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் சம்பந்த மான பல போலி ஆவணங்கள் பற்றி விசாரிக்கப்பட்டு வரும் அதே வேளை இந்த பணம் தேர்தலுக்கு செலவிடப்பட்ட பணத்தில் மீதான பணம் என்பது பற்றி விசாரிக்கப் படுவதாகவும் ரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக