3 மார்ச், 2010

13 இலங்கையர்களுடன் சவூதி கப்பல் கடத்தல்
ஏடன் வளைகுடாவில் சம்பவம்

பதின்மூன்று இலங்கையர்களுடன் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான கப்பல் சோமாலிய கடற் கொள்ளை யர்களினால் நேற்று கடத்தப்பட்டுள் ளது.

பிஎம்.டி. அல் நிஸார் அல் சவுதிபீ என்ற கப்பல் 5, 136 மெற்றிக் தொன் பொருட்களை எடுத்துச் செல்லும் போதே கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருப்பதாக ஏ.எப்.பி. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் ஜப்பானிலிருந்து சவூதி அரேபியாவின் ஜித்தாவை நோக் கிச் செல்லும் வழியில் ஏடன் வளை குடாவில் வைத்தே சோமாலியர் களால் கடத்தப்பட்டுள்ளது. கப்பல் கடத்தப்படும்வேளை அதில் பதின் னான்கு பேர் இருந்துள்ளனர். கிரேக்க கப்டனைத் தவிர்ந்த ஏனைய 13 பேரும் இலங்கையர்களென கிழக்கு ஆபிரிக்காவில் கடல் விவகாரங்களு க்கான உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் தலைவர் என்ட்ரூவ் முவன்குர ஏ. எப். பிக்கு தெரிவித்துள்ளார்.

இதனை ஐரோப்பிய ஒன்றியத்தின் கப்பல் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைப் பிரிவின் பேச்சாளர் ஜோன் ஹார்பர் என்பவரும் உறுதிப் படுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக