3 மார்ச், 2010

இலங்கை சமூக சேவகி ஜன்சிலாவுக்கு அமெரிக்க அரசின் துணிச்சல் விருது

அமெரிக்க அரசின் இராஜாங்க துறையால் தெரிவு செய்யப்பட்ட அனைத் துலக அளவில் 2010 ஆம் ஆண்டின் துணிச்சல் மிகுந்த பெண்களுக்கான விருதைப் பெறப்போகும் பத்து பேரில் இலங்கையைச் சேர்ந்த பெண் சமூக சேவகி ஜன்சிலா மஜீத்தும் ஒருவர்.

20 வருடங்களாக இடம் பெயர்ந்து வாழும் இவா உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கான சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க அரசின் இராஜாங்க துறை செயலாளர் ஹிலரி கிளிண்டன் திங்கட்கிழமை அறிவித்த விருது பெறுபவர்களுக்கான பட்டியலில் ஜன்சிலா மஜித்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.

எதிர்வரும் 10 திகதியன்று அமெரிக்க அரசின் இராஜாங்க துறை சார்பில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்பட்ட பத்து பேருக்கும் ஹிலரி கிளிண்டன் விருது அளித்து கெளரவிப்பார். அரசு துறையால் வெளியிடப்பட்டுள்ள விபரங்களில் மஜீத் புத்தளம் பகுதியில் உள்ள சமுதாய சேவைகள் மையத்தின் நிர்வாக காப்பாளர் என்றும் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியைச் சார்ந்தவர்களுக்கு தன் சொந்த செலவில் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றார். மஜீத்தின் முக்கிய நோக்கம் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் சமுதாயத்தினரிடையே நல்லுறவை ஏற்படுத்துவதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக