3 மார்ச், 2010


சிலி நாட்டு பூகம்பத்தால் விபரீதம்
பூமியில், நாளின் நேரம் குறைகிறது




கடந்த சனிக்கிழமை சிலி நாட்டில் 8.8 ரிக்டர் அளவு பூமி அதிர்ச்சி ஏற்பட்டது அல்லவா?
இதன் காரணமாக பூமியில் நாளின் நேரம் 1.26 மைக்ரோ செகண்ட் அளவுக்கு குறையலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள்.

சிலி நாட்டு பூகம்பம் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியால் பூமியின் அச்சு 8 சென்டிமீட்டர் அல்லது 3 அங்குலத்துக்கு விலகி இருக்கலாம் என்றும், இதன் காரணமாக பூமியில் ஒரு நாளின் நேரம் 1.26 மைக்ரோ செகண்ட் வரை குறைய வாய்ப்பு உள்ளது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக