3 மார்ச், 2010


ஆயுதக் கொள்வனவுக் குற்றச்சாட்டு
ஹைகோர்ப் பணிப்பாளருக்கு பிணையில் செல்ல அனுமதி மறுப்பு

ஹைகோர்ப் நிறுவனத்தின் பணிப் பாளர் வெல்லிங்டன் டியோட்டுக்கு பிணை மறுக்கப்பட்டு அவர் மீண் டும் தடுப்புக் காவலில் வைக்கப்ப ட்டார். ஆயுதக் கொள்வனவு குற்றச் சாட்டின் பேரில் தடுத்து வைக்கப் பட்டுள்ள ஹைகோர்ப் நிறுவன பணிப்பாளரை ரகசிய பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்த னர்.

பொது மக்கள் சொத்து சட்டத்தின் கீழேயே சந்தேக நபரை, ரகசிய பொலிஸார் கைது செய்து நீதிமன்ற த்தில் ஆஜர் செய்துள்ளனர். எனவே, அவரை பிணையில் விடுவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று கூறிய மேலதிக மாவட்ட நீதவான் லங்கா ஜயரட்ன, சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதி மறுத் தார்.

விசாரணைகளை துரிதப்படுத்த ரகசிய பொலிஸார் நடவடிக்கை மேற் கொள்வதுடன் அது தொடர்பான விரி வான அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதவான் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் சந்தேக நபரின் வங் கிக்கணக்குகள் தொடர்பான தகவல் களை வங்கி முகாமையாளர்கள் இரு வரும் விசாரணை நடத்துவோரிடம் வழங்கவேண்டும் என்றும் நீதவான் பணித்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி தம்மிக தொடவத்த கேட்டுக்கொண்டதன் பேரில் சந்தேக நபர் மற்றொரு வழக்கு தொடர்பாக இராணுவ அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு சிறைச் சாலை விதிகளின் கீழ் அனுமதி வழங்குமாறு சிறை அதிகாரிகளை நீதவான் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக