3 மார்ச், 2010

ஜனாதிபதி குடும்பத்தினரின் பெயரை பாவித்து மோசடியில் ஈடுபட்டோர் குறித்து முறைப்பாடு

சட்டத்தின்முன் நிறுத்த விசேட விசாரணைப் பிரிவு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட குடு ம்ப அங்கத்தவர்களின் பெயரை உப யோகித்து அவர்களின் நற்பெயருக் குப் பங்கம் விளைவிக்கும் வகை யில் மோசடி மற்றும் ஏமாற்று நட வடிக்கைகளில் ஈடுபட்டு பொது மக்களை பல்வேறு அசெளகரியங்க ளுக்குள்ளாக்குவோர் சம்பந்தமாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற் றுள்ளதாகப் பொலிஸ் தலைமைய கம் தெரிவித்தது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அதிக கவனம் செலுத்தி வரு வதுடன் இத்தகைய அசெளகரியங்க ளிலிருந்து பொதுமக்களைப் பாது காக்கும் வகையில் சம்பந்தப்பட்ட வர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வென விசேட விசாரணைப் பிரி வொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு டன் இணைந்ததாக இப்பிரிவு இய ங்குவதுடன் பொலிஸ் மா அதிபரின் உத்தரவு மற்றும் வழிகாட்டலுக்கமைய இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்கக்கோனின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் இவ்விசேட பிரிவில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவும் இடம் பெறுகின்றார்.

மேற்படி மோசடி நடவடிக்கைகள் சம்பந்தமாக தகவல்கள் கிடைக்கப் பெறுவோர் மற்றும் மோசடிகளில் அகப்பட்டு பாதிக்கப்பட்டோர் 011-2441197 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது 2333496, 2325391, 2333496 என்ற பெக்ஸ் இலக்கத்துடனோ தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிவிக்க முடியும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக