25 மார்ச், 2010

குறானின் படத்துடன் விளம்பரம்; முஸ்லிம்கள் கடும் ஆட்சேபம்

தமிழ்ப் பத்திரிகையொன்றில் (தினகரனில் அல்ல) திருக்குர்ஆனின் பெரிய அளவிலான படத்துடன் ஒரு கிண்ணத்தையும் பிரசுரித்து ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு விளம்பரம் செய்யப்ப ட்டுள்ளதை முஸ்லிம்கள் கடுமையாக ஆட்சேபிக்கின்றனரென ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் விடுத்து ள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

பள்ளிவாசலுக்குச் செல்லும் அனைவரும் பிரார்த்திக்குமாறும், புஅல்லாஹ்வே உங்கள் ஆசீர்வாதத்தைத் தாருங்கள்பூ என்றும் ஏக வல்ல அல்லாஹ்வையும் அவனுடைய அருள்மறையாம் குர்ஆனையும் மிகவும் நிந்தனை செய்யும் வண்ணம் இவ்வரசியல் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டு ள்ளதை முஸ்லிம் இயக்கங்களும், உல மாக்களும், பொதுமக்களும் எம் கவன த்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

அல்லாஹ்வையும் புனித குர்ஆனை சம்பந்தப்படுத்தி ஒரு தேர்தல் சின்னத்தைப் பிரசுரித்துள்ளமை இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும்.

முஸ்லிம்கள் இந்நாட்டின் வந்தேறு குடிகள் என முஸ்லிம் சமூகத்தை இழிவு படுத்திய சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரும் இவ்விளம்பரம் முஸ்லிம்களின் உள்ளங்களை ஆழ புண்படுத்தியுள்ளது.

சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு நாடு பூராவும் சுற்றித்திரிந்து முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்விடுத்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நிச்சயம் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

அடுத்து ஏகவல்ல அல்லாஹுத்த ஆலாவையும், அவனது அருள்மறையையும் மிகவும் கீழ்த்தரமான அரசியல் விளம் பரத்துக்குப் பாவித்ததையிட்டு பொன் சேகாவின் கட்சியும், அதன் பிரதான பங்காளியான ஜே.வி.பியும் முஸ்லிம்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும்.

புத்தபிரானின் உருவச் சிலைக்குக் கீழே நிர்வாணமான ஒரு பெண்மணியை வரைந்து பெளத்த மக்களை சீற்றமடையச் செய்துள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ள இத்தருணத்தில் முஸ்லிம்களையும் இவ்விதம் விசனத்துக்குள்ளாக்கும் முறை யில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டு ள்ளது என்பதை மதங்களை நேசிக்கும் யாவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

மதங்களையும், அவற்றைப் பின்பற்று வோரையும் இவ்விதம் அவமானப்படுத்தி களங்கம் விளைவிக்கின்ற இச்செயற் பாடுகளின் பின்னணியில் மேற்கந்திய சதிகாரக் கும்பல்கள் சியோனிஸ சக்திகள் ஒழிந்திருப்பது முஸ்லிம் உலகுக்கு ஒரு புதிய விடயமல்ல. இந்த யூத சியோ னிஸத்தின் உள்நாட்டு முகவர்களான ஐ.தே.கவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் வாக்களிக்கக் கோரிய சரத் பொன் சேகாவின் இந்த மதவிரோத செயற் பாடுகளுக்கு எதிராக அறிக்கை விடுவார் களா? என முஸ்லிம்கள் கேட்க விரும்பு கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக