25 மார்ச், 2010

'மீளக்குடியமர்த்தும் பணிகளில் எவ்வித தாமதமும் கிடையாது'





கிளிநொச்சியில் மேலும் 1500 குடும்பங்கள் 29ம் திகதி குடியமர்வு; பூநகரியில் பணிகள் யாவும் பூர்த்தி


இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான பணிகளில் எந்த விதமான தாமதமும் கிடையாதென் றும் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப் பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவ ட்ட அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர் வரும் 29 ஆம் திகதிக்குள் மேலும் 1500 குடும்பங்களை மீளக்குடியமர் த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா கத் தெரிவித்த அரச அதிபர், தேர்த லுக்குப் பின்னர் மீண்டும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுமென் றும் கூறினார்.

கடந்த நவம்பர் மாதத்திலிருந்து இதுவரை கிளிநொச்சி மாவட்டத் தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 11,817 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளன. பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்றப்பணிகள் நிறைவு செய் யப்பட்டுள்ளன.

எக்காரணத்திற்கா கவும் மீள்குடியேற்றம் தாமதமாகவி ல்லை என்று தெரிவித்த அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரன், கண்ணி வெடிகள் துரிதமாக அகற்றப்பட்டு தொடர்ச்சியாக மக்களை மீளக்குடி யமர்த்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்து மீள்குடியேற காத் திருக்கும் மக்கள் எதிர்வரும் ஏப்ரல் எட்டாந் திகதி நடைபெறவுள்ள பாரா ளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்க ளிக்க விண்ணப்பித்துள்ளார்கள். அத னால், அவர்கள் தங்கியிருக்கும் நலன் புரி நிலையங்களில் வாக்களிப்பத ற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. அவ்வாறானவர் களை சொந்த இடங்களுக்குக் கொண்டு சென்றால், வாக்களிப்பதில் சிக் கலை எதிர்கொள்ளலாம்.

ஆகவே, எதிர்வரும் 29ஆம் திகதியுடன் மீள்குடியேற்றத்தை இடைநிறுத்த எண்ணியுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மீள்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப்படுமென்றும் அரச அதிபர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக