25 மார்ச், 2010

சமுர்த்திக் கொடுப்பனவை அதிகரிக்க அரசு தீர்மானம்




23,700 ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் திட்டம்

சமுர்த்தி கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆகக் குறைந்த கொடுப்பனவை ஆயிரம் ரூபாவாக அதிகரிப் பதற்கு எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதிக்குப் பின் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் இதற்கு வழி செய்யப்படும் என்று தகவற்றுறை அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அத்துடன் சமுர்த்தி அதிகார சபையின் ஊழியர்கள் 23,700 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார். மனிதாபிமான செயற் பாடுகளின் முடிவில் சேமிக்கப்பட்ட நிதியின் மூலமே இவ்வாறான நலன்புரி நடவடிக்கைகளுக்கான வாய்ப்பு கிடைத்த தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

16 இலட்சம் பேர் சமுர்த்தி வறுமை ஒழிப்பு நிவாரண உதவியை பெற்று வருகின்றனர். அத்துடன் சமுர்த்தி அதிகார சபை அவர்களுக்கு இலகு கடன், சுய வேலை வாய்ப்பு மற்றும் சிறு முதலீட்டு திட்டங்களுக்கு உதவி வருகிறது.

சமுர்த்தி நிவாரண உதவித் தொகையை அதிகரித்தல், சுயதொழில் வசதிகளை ஏற்படுத்துதல், மற்றும் சிறிய முதலீட்டு திட்டங்களுக்கு உதவுதல் ஆகியவை மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வரப்பிரசாதங்களாகும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக