25 மார்ச், 2010

அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் 94அகதிகளுடன் மற்றுமொரு படகு மீட்பு-



அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் 94அகதிகளுடன் மற்றுமொரு படகு அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படகில் இலங்கையர்களும் இருக்கலாமென்று தகவல்கள் தெரிவிக்கின்றதுடன், இப்படகு தற்போது கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ்தீவில் அதிக நெருக்கடி நிலைமை காணப்படுவதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலிய கடல் எல்லையில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் கெவின்ரூட் தெரிவித்த சில மணித்தியாலங்களிலேயே இந்தப்படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் அதிகளவில் அவுஸ்திரேலியா நோக்கி வந்த சேர்ந்த படகு அகதிகளை எவ்வாறு சமாளிப்பது என்பதே இவ்வருடத்தின் அவுஸ்திரேலியாவின் சவாலாக இருக்குமென்று வெளிவிவகார அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு வெற்றிகரமாக இல்லையென எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார்.


இலங்கையின் யுத்தகால நிலைமையே தமிழ் மக்கள் அவுஸ்திரேலியா நோக்கி வருவதற்கான காரணமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அனைத்து நாடுகளும் அவதானம் செலுத்த வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக