மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் 45பேரை விடுவிக்க வேண்டுமென மலேசிய மனித உரிமைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மலேசியாவிலுள்ள இலங்கை அகதிகளின் உறவினர்கள் மலேசிய அரசாங்கத்திற்கு வலியுறுத்தல் கடிதங்களை அனுப்பிவைக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலேசிய மனித உரிமைகள் குழுவின் தலைவர் கே.ஆறுமுகம் இதுபற்றி கருத்துரைக்கையில், குறித்த 45இலங்கை அகதிகளும் மலேசியாவின் லங்காப் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஐ.நா சபையின் அகதிகள் ஆணையத்தின் அங்கீகாரத்துடனான அகதிகள் விசாக்களை கொண்டிருந்தபோதும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. தற்போது அவர்களின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் அகதிகள் ஆணையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முறையான அகதிகள் விசா இருக்கின்றமையே இதற்கான காரணமாகும். அவர்கள் விடுவிக்கப்படாத பட்சத்தில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
25 மார்ச், 2010
இலங்கை அகதிகளை விடுவிக்குமாறு மலேசிய மனித உரிமைகள் குழு கோரிக்கை-

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக