எரிசக்தி உள்பட அனைத்து விஷயங்களிலும் பாகிஸ்தானுக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல்கட்ட பேச்சு வாஷிங்டனில் புதன்கிழமை தொடங்கியது. இதில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தலைமையிலான குழுவினர், ஹிலாரி தலைமையிலான அமெரிக்க குழுவினருடம் பேச்சு நடத்தினர்.
அப்போது இந்தியாவுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் போல, பாகிஸ்தானுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் அமைதி பேச்சைத் தொடங்க உதவ வேண்டும்.
ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளை ஒழிக்கும் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்க உதவ வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் பாகிஸ்தான் தரப்பில் முக்கியமாக கூறப்பட்டன.
"அமெரிக்காவிடம் இருந்து எரிசக்தி துறை உள்பட அனைத்து விஷயங்களிலும் ஒத்துழைப்பு கிடைக்கும். அதன் மூலம் பாகிஸ்தானில் தொழில் துறை வளர்ச்சியடையும், பொருளாதார முன்னேறம் ஏற்படும்' என்று ஷா முகமது குரேஷி நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து ஹிலாரி கிளிண்டன் கூறுகையில், "எரிசக்தி உள்பட அனைத்து விஷயங்களிலும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவும்.
இந்தியாவுடன் பலமுறை பேச்சு நடத்திய பின்புதான் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எனவே இந்த விஷயத்தில் அவசரம் காட்ட மாட்டோம்.
பாகிஸ்தானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும். இந்தியா- பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை' என்று அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக