பூம்புகார் பகுதிக்கு விஜயம்- வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் நேற்று வவுனியா பூம்புகார் பகுதிக்கு விஜயம்செய்து அப்பகுதி மக்களைச் சந்தித்துள்ளனர். இதன்போது பூம்புகார் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பூசை வழிபாட்டு நிகழ்விலும் புளொட் வேட்பாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள பொதுமண்டபத்தில் விசேட கூட்டமொன்றும் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) ஆகியோர், இந்த பூம்புகார் பகுதியைப் பொறுத்தமட்டில் 70களின் இறுதிப்பகுதியில் காந்தீயம் அமைப்பினால் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதியாகும். இந்நிலையில் இப்பகுதி மக்களாகிய உங்களுக்கும் எங்களுக்குமிடையிலான தொடர்புகள் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக நீண்டகாலமாக அறுந்திருந்தபோதிலும் இனி நமக்கிடையிலான நல்லுறவைத் தொடர்ந்து பேணவேண்டும். இங்குள்ள மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு அத்தியாவசிய உதவிகள் தேவைப்படுகின்றன. எனவே அதற்குத் தேவையான உதவிகளை வழங்கவும், மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நாம் முன்னெடுத்துவரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவைப்படுகிறது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களுக்கு நீங்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேற்படி பூஜை வழிபாடுகளிலும் பொதுக் கூட்டத்திலும் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். மீண்டும் உறவுகளைப் புதுப்பிக்க வேண்டுமென்றும், முன்னர் புரிந்த உதவிகள் மறக்க முடியாதவை என்றும் பொதுமக்கள் இதன்போது தெரிவித்ததுடன், தமது அத்தியாவசிய தேவைகள் தொடர்பிலும் புளொட் வேட்பாளர்களிடம் எடுத்துக் கூறினர். இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றம் க.சிவநேசன் (பவன்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
25 மார்ச், 2010
புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்)

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக