25 மார்ச், 2010

வடக்கின் 500 இளைஞர்களுக்கு அமெ. தொழில்நுட்பப் புலமைப் பரிசில்




வடக்கின் 500 இளைஞர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் தகவல் தொழில் நுட்பத்தில் புலமைப் பரிசில்களை வழங்கியுள்ளது.

கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 250 இளைஞர்களுக்கும் இதுபோன்ற புலமைப் பரிசிலை அமெரிக்கத் தூதரகத்தின் மநஅஐஈ நிறுவனம் அண்மையில் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை அதிகரிப்பதற்கு ஏற்றவாறு இவர்களது தொழில்சார் திறனை விருத்தி செய்வதே இந்தப் புலமைப் பரிசில் வழங்கப்படுவதன் நோக்கமாகும்.

விவசாயம், ஆடைக் கைத்தொழில், ஊடகத்துறை மற்றும் சுற்றுலாப் பயணத்துறைகளில் ஏற்பட்டிருக்கும் வேலை வாய்ப்புக்கான தேவையினைப் பூர்த்திசெய்யும் வகையில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் மஙூஙீகூஙுகூஞ்க்க்ஷ டச்ஞ்க்ஙூஞ்கூஹஙீ டஹசுஞ்ஙூக்சுசூகுகூசி ளமடடன திட்டத்துடன் இணைந்து அமெரிக்க அபிவிருத்தி நிறுவனம் இந்தத் தகவல் தொழில் நுட்பப் புலமைப் பரிசில் செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்துகிறது.

"இலங்கையிலுள்ள மொத்த தொழில் வாய்ப்புக்களில் 39 சதவீதமானவை மேற்குறிப்பிட்ட இந்த நான்கு துறைகளிலுமே உள்ளன. அத்துடன் இந்தத் துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறவேண்டுமெனில் தகவல் தொழில்நுட்பம் மிகவும் அவசியமானதொன்று" என மநஅஐஈ இன் இலங்கைக்கான பணிப்பாளர் றொபேக்கா கோன் தெரிவிக்கிறார்.

இந்த இளைஞர்கள் தமக்குப் பொருத்தமான தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதோடு நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் அவர்கள் பங்கெடுப்பதற்கும் இந்தத் தகவல் தொழில்நுட்பப் புலமைப் பரிசில் வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள தனது துணை அமைப்புக்களுடன் இணைந்து ஐஙூகிச்சூகுஹசுக் என்ற தகவல் தொழில்நுட்பக் கற்கை நெறியினை வழங்கும் நிறுவனம் புலமைப் பரிசிலைப் பெற்ற இளைஞர்களுக்கான பயிற்சிகளை வழங்கவிருக்கிறது.

இது தவிர, கிழக்கு மாகாணத்தில் வாழும் 10,000 இளைஞர்களுக்குப் பல்வேறுபட்ட தொழில் பயிற்சிகளை வழங்கும் பிறிதொரு செயல்திட்டத்தினையும் மநஅஐஈ நடைமுறைப்படுத்தவிருக்கிறது.

நாட்டில் போர் முடிவடைந்த நிலையில் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திக்கான முனைப்புக்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக இந்தப் புலமைப் பரிசில் திட்டத்திற்கான மடட இன் திட்ட முகாமையார் ஹர்சி ஹிவகி குறிப்பிடுகிறார்.

மநஅஐஈ நிறுவனமானது கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிகளைக் உலகளாவிய ரீதியில் வழங்கி வருகிறது. 1956ம் ஆண்டு முதல் சிறிலங்கா மக்களின் நன்மைகருதி 2 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தினை முதலிட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக