தேர்தல் பிரசார மேடைகளில் அளவுகணக்கின்றி வாக்குறுதி கள் வழங்கப்படுகின்றன. வேட்பாளர்களால் பணம் எவ் விதம் அள்ளிவீசப்படுகின்றதோ அதே போல வாக்குறுதிக ளும் ‘பார்த்துப் பாராமல்’ வழங்கப்படுகின்றன.
பிரதான கட்சிகள் சிறுபான்மையினரின் வாக்குகளில் கூடுதலான அக் கறை செலுத்துவதால் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர் பாக வாக்குறுதி வழங்குவதில் எல்லோரும் தாராளமாக இருக்கி ன்றார்கள். சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பாகக் கவர்ச் சியான வாக்குறுதிகளை அளிப்பவர்களை இரண்டு வகைகளுள் அடக்கலாம்.
ஆட்சியதிகாரத்துக்கு அண்மையிலும் வர முடியாது என்பதை தெரிந்துகொண்டு வாக்குறுதி வழங்குபவர்கள் ஒரு வகை யினர். தமிழ் மக்கள் விரும்பினால் பிரிந்து செல்லும் உரிமையை வழங்குவோம் என்பது போன்ற வாக்குறுதிகள் இந்த வகையின.
நிறை வேற்ற வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருக்காது என்பதைத் தெரிந்துகொண்டு வாக்குகளுக்காக அளிக்கப்படும் வாக்குறுதிகள் இவை.
ஆட்சியதிகாரத்தை இலக்குவைத்துப் போட்டியிடும் பிரதான கட்சிகளும் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று வாக் குறுதிகளை வழங்குகின்றன. முதலில் வாக்குகளைப் பெற்றுவிட்டுப் பின்னர் மக்களை ஏமாற்றுவது இவர்களின் நோக்கம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தமிழ் மக் கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாகப் பல வாக்குறு திகளை யாழ்ப்பாணத்தில் வழங்கியிருக்கின்றார்.
தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டு வாக்குக் கேட்போரை விரட்டியடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்.
காட்டிக்கொடுப்போர் என்று இவர் கூறுவது துரோகமிழைப்பவர்களை எனக் கொள்ளலாம். அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சிதான் தமிழ் மக்களுக்கு மிகக் கூடுதலாகத் துரோகமிழைத்த வரலாற்றைக் கொண்டிருக்கின்றது.
பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் இனப் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு. இந்தத் தீர்வுத்திட் டம் நடைமுறைக்கு வந்திருந்தால் தமிழ் பேசும் மக்கள் முகங் கொடுக்கும் ஏராளம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கும்.
ஏகப்பட்ட உயிரிழப்புகளையும் வேறு அழிவுகளையும் தவிர்க்க முடி ந்திருக்கும். இத்தீர்வுத்திட்டம் நடைமுறைக்கு வர முடியாமற் போன தற்கு ரணில் விக்கிரமசிங்ஹவும் அவரது கட்சியுமே காரணம்.
ஐக் கிய தேசியக்கட்சி அன்று இத் தீர்வுத்திட்டத்துக்கு ஆதரவு அளித் திருந்தால் பிந்திய காலத்தில் தமிழ் மக்கள் பாரிய துன்பங்களை அனுபவிக்க நேர்த்திருக்காது.
இனப் பிரச்சினையின் தீர்வுக்கான முதலாவது ஏற்பாடு பண்டா- செல்வா ஒப்பந்தம். அது நடைமுறைக்கு வர முடியாத நிலையைத் தோற்றுவித்ததும் ஐக்கிய தேசியக் கட்சியே.
மாவட்ட சபைகள் வழங்குவதாக வாக்குறுதி அளித்துத் தமிழரசுக் கட் சியின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்த ஐக்கிய தேசியக் கட்சி மாவட்ட சபை வழங்க முடியாது என்று சில காலத்தின் பின் பச்சை யாகவே கூறியது.
எல்லாவற்றுக்கும் மேலாக கறுப்பு யூலையை மக்கள் மறக்க முடியாது. தமிழ் மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் உலைவைத்த அந்த இனசங்காரம் ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டமிட்ட செயல்.
அப்போது தமிழ்க் கடைகள் எரித்து நாசமாக்கப்பட்டதை நியாயப் படுத்தும் வகையில் கருத்துக் கூறியவர்தான் ஐக்கிய தேசியக் கட்சி யின் இன்றைய தலைவர்.
இவ்வாறான பின்னணியைக் கொண்டிருப்பவர்கள் சிறுபான்மையினரு க்கு அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று அளிக்கும் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பது தவறாக வழிநடத்தப்படுவதாக அமைந்துவிடும்.
தேர்தல் வழமையாக வந்துபோகும் திருவிழாவல்ல. தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளிலேயே அவர்களின் எதிர் காலம் தங்கியுள்ளது.
வாக்குறுதி வழங்குபவர்களின் நம்பகத்தன்மை யையும் வாக்குறுதிகளின் நடைமுறைச் சாத்தியத்தையும் சீர்தூக்கிப் பார்த்தே மக்கள் தங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக