மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிலைன்பீ வரிசை வீட்டு முறையை இல்லாதொழித்து ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 7 பேர்ச் காணியில் சகல வசதிகளையும் கொண்ட தனி வீடுகளை அமைத்துக் கொடுக்க தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய அபிவிருத்தியில் மலையகத் தோட்டப் புறங்கள் உள்வாங்கப்பட்டதன் பின்னர் முதலில் வீடமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட் டிருப்பதாகவும் அவ்வாறு கடந்த நான்கு ஆண்டுகளில் 12,231 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள் ளதாகவும் தேச நிர்மாண அமைச்சின் தோட்ட உட்கட்டமைப்பு விடயங்களுக்கான மேலதிகச் செய லாளர் திருமதி சந்திரா விக்கிரம சிங்க தெரிவித்தார். இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு 900 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மலையகத்தில் பாரிய அபிவி ருத்திப் பணிகளை அரசாங்கம் முன் னெடுப்பதாகவும் ஆனால்,
ஊடகங்களில் பெரிதாகத் தகவல் கள் வெளிவருவதில்லை எனத் தெரி வித்தார்.
குடிநீர், சுகாதாரம், மலசல கூட வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வள ங்களைப் பெற்றுக் கொடுத்து வருவ தாகக் கூறிய திருமதி விக்கிரமசிங்க, நீண்ட காலமாக எந்தத் திட்டமும் இல்லாதிருந்த நிலை இனியும் நீடிக்க அரசாங்கம் இடமளிக்காது என்றுக் கூறினார்.
தோட்ட வீதிகளைச் செப்பனிடு வதற்கென 828 மில்லியன் செலவி டப்பட்டுள்ளது. 139 மில்லியன் செலவில் 700 கிலோ மீற்றர் வீதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
87 நீர்விநியோகத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு 235 கோயில்களை அபிவிருத்தி செய்ய வும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தேச நிர்மாண அமைச்சின் மூலம் மலை யகத்தில் 4614 செயற்றி ட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளதாகவும் அவர் மேலும் தெரி வித்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக