21 மார்ச், 2010

ஐ.தே.க வெற்றிபெற்றால் விரைவில் மீள்குடியேற்றம் அமுல்ப்படுத்தப்படும்:ரணில்



பொதுத்தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், போரினால் இடம்பெயர்ந்து அவலப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை அவர்களது பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தி அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தப் போவதாக வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபைக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இப்பிரசாரக் கூட்டத்தில் ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

போர் நடைபெற்ற இடங்களில் கண்ணிவெடிகளற்ற பிரதேசங்களிலும், கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களிலும் உடனடியாகவே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். போர் நடைபெற்ற பிரதேசங்களில் அழிவடைந்துள்ள சொத்துக்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என்றும் ரணில் கூறினார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளில் சாட்சியமுள்ளவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும். ஏனையவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நட்டஈடு வழங்குதல், அரச ஊழியருக்கு 10000 ரூபா ஊதிய உயர்வு , 500 ரூபாவில் யூரியா உரம் தரப்படும், சமுர்த்திக்கொடுப்பனவு கூட்டப்படும், போன்ற வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டிருந்தன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக