21 மார்ச், 2010

நல்லொழுக்கத்தை மதிக்கும் நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படும் ஜனாதிபதி






ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப நல்லொழு க்கத்தை மதித்து நடக்கும் மக்கள் வாழும் நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் கண்டியில் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது பொதுத் தேர்தல் பிரசாரக் கூட்டம் கண்டி கெட்டம்பே மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்

உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்:- ஜனாதிபதித் தேர்தலில் 18 இலட்சம் மேலதிக வாக்குகளை நாட்டு மக்கள் எனக்கு அளித்து என்னை இரண்டாவது தடவை யாகவும் இந்நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்துள்ளார்கள். ஒழுக்கத்தை மதித்து நடக்கும் மக்கள் வாழும் நாடாக இந்நாட்டைக் கட்டியெழுப்புமாறு கோரியே மக்கள் எனக்கு ஆணை வழங் கியுள்ளார்கள். மக்களின் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற நான் எப்போதும் தயாராக உள்ளேன்.

ஒழுக்கம் இல்லாவிட்டால் கட்சி யொன்றை நடாத்த முடியாது. அதேநேரம் ஒழுக்கம் இல்லாமல் நாட்டைக் கட்டியெழுப்பும் முடியாது. இதனை நான் உறுதியாக நம்புகிறேன்.

2005ம் ஆண்டில் நாட்டு மக்கள் எனக்கு அளித்த ஆணைப்படி பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்தியுள்ளேன். நான் அன்று ஜனாதிபதியாக பதவியேற்ற போது பாராளுமன்றத்தில் சபாநாயகரைக் கூட எம்மால் தெரிவு செய்ய முடியாதிரு ந்தது.

அப்படியிருந்தும் வெவ்வேறு அபிப்பிரா யங்களைக் கொண்டிருந்தவர்களை ஒன்றுபடுத்திக் கொண்டு நாட்டை ஐக்கியப்படுத்தியுள்ளேன்.

மூன்று விருப்பு வாக்குகளை அளிக்க முடியும். முதலில், முதல் தெரிவாக வெற்றிலைச் சின்னத்திற்கு புள்ளடியிடுங்கள். மூன்று வாக்குகளையும் நீங்கள் விரும்பிய மூவருக்கு அளியுங்கள் என்றார்.

ஐ. ம. சு. மு. னின் கண்டி மாவட்ட அபேட்சகர்கள் இக் கூட்டத்தில் உரையாற்றி னர்.

அமைச்சர் டி. எம். ஜயரட்ன, மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க முன்னாள் அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்த, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகரும், ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ. எச்.எம். அஸ்வர், ஜெக்ஸன் அன்டனி, தென் மாகாண சபை உறுப்பினர் அனார்கலி ஆகர்சா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக