21 மார்ச், 2010

17 ஆவது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்:ஐரோப்பிய ஒன்றியம்



இலங்கை அரசியல் யாப்பின் 17ஆவது திருத்தச் சட்ட மூலத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைறைப்படுத்த வேண்டுமென ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் இலங்கை அரசை வற்புறுத்தியுள்ளதாக அரச உயர் மட்ட வட்டாரங்களிலிருந்து தெரியவருவதாக நேற்று வெளியான வாராந்த சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையை தொடர்ந்து இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் இலங்கை அரசின் சார்பில் சென்ற இலங்கை குழுவினர் ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அல்படுத்தி அரசியல் அமைப்புச் சபையை நிறுவுதல், சுயாதீன தேர்தல் ஆணைக் குழுவை நியமித்தல், அரச சேவை ஆணைக் குழுவை உருவாக்குதல் உட்பட அனைத்து விடயங்களையும் அமுல்படுத்த வேண்டுமென ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் இலங்கைக் தூதுக் குழுவினரைக் கேட்டுக் கொண்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக