கட்அவுட்டுக்களை அகற்றும் பணி 80% பூர்த்தி
150 பேரை தேடி வலைவிரிப்பு
தேர்தல் காலத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதனால், தேர்தல் வன்முறைகள் தொடர்பான தகவல்களை பொலிஸ் நிலையங்களுக்குப் பெற்றுக் கொடுக்க பொதுமக்கள் தயங்க வேண்டாமென தேர்தலுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ண வேண்டுகோள் விடுத்தார்.
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தேர்தல் வன்முறையில் ஈடுபடுவோர், ஈடுபட முயற்சிப்போர் ஒத்துழைப்பு வழங்குவோர் உள்ளிட்ட அனைவரும் கட்சி பேதம், பாரபட்சம் எதுவுமின்றி கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவரென பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.
பாராளுமன்றத் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று வரை தேர்தல் வன்முறைகள் தொடர்பாக கிடைத்துள்ள 143 முறைபாடுகளும் விசாரணைக்குட்படுத்தப் பட்டு வரும் அதே நேரம் அவற்றுடன் தொடர்புடையவர் களென சந்தேகிக்கப்படும் 65 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிடைத்துள்ள தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கமைய மேலும் 150 பேர் கைது செய்யப்பட விருப்பதாகவும் அவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களும் வலை விரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சில வன்முறைச் சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பொலிஸ் மாஅதிபரின் பணிப்பின் பேரில் கொழும்பு குற்றப் புலனாய்வு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு நாட்டின் பல பாகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி பொலிஸ் மாஅதிபர் கூறினார்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் நேற்று மாலை வரை 80 சதவீதமான சுவரொட்டிகள் கட்அவுட்கள் மற்றும் பதாதைகள் அகற்றப்பட்டிருப்பதாகவும் எஞ்சியவற்றை துரிதகதியில் அகற்றுவதற்கு பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் தபால் மூல வாக்களிப்புக்கு ஏற்ற வகையில் வாக்களிப்பு நடத்தப்படும் அரச நிறுவனங்களில் பொலிஸ் பாதுகா ப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள் ளப்பட்டிருப்பதுடன் அன்றைய இரு தினங்களும் விசேட பொலிஸ் நடமாடும் சேவைகள் நடத்தப்படு மென்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக