10 மார்ச், 2010

வன்னியில் கைவிட்டு வந்த சொத்துகளை மீள பெற்றுக் கொடுக்க நடவடிக்கை




கட்டளைத் தளபதியிடம் பதிவு செய்ய வேண்டுகோள்

* இயல்பு வாழ்வு ஏற்படுத்த அரசுடன் இணைந்த செயற்பாடு

* வன்னியில் தனியான பல்கலைக்கழகம்

* மீள்குடியேறுவோருக்கு 3 1/2 இலட்சம் வீட்டுத் திட்டம்


வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதியில் வளங்களைக் கைவிட்டுவந்த மக்களுக்கு அவர்களின் சொத்துகளை மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாள ரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

மக்களின் சொத்துகளை மீளப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் வன்னி கட்டளைத் தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதா கக் கூறிய கிஷோர் எம்.பீ. வாகனங்களின் உரிமையாளர்கள் வன்னி கட்டளைத் தளபதியிடம் தமது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண் டுள்ளார்.

விபரங்கள் பதிவுசெய்யப்பட்டதும், குறித்த உரிமையாளர்களுடன் சென்று உரிய ஆதாரங்களைக் காண்பித்து வாகனங்களைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாகவும் கிஷோர் எம்.பீ. தெரிவித்தார்.

வன்னி மக்களின் வாழ்க்கையை பழைய நிலைக்குக்கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கூறிய அவர், அரசியல் கொள்கையில் உறுதியாக இருப்பதுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுப்பதே பொருத்தமான நடவடிக்கையாகுமென்றும் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மக்களுக்கு மூன்றரை இலட்சம் ரூபா வீடமைப்புத் திட்டமொன்றை உருவாக்குவதுடன், முகாம்களில் எஞ்சியுள்ள மக்களை கட்டங்கட்டமாக மீளக்குடியமர்த்துவது அரசியல் கைதிகள் அனைவரையும் மூன்று கட்டங்களாக விடுவித்தல்.

அதாவது பிணையில் விடுவிப்பது, விடுதலை செய்வது, வழக்குத் தொடர்வது என இந்தக் கைதிகளை விடுவித்தல் புனர்வாழ்வளி க்கப்பட்டு வரும் பதினோராயிரம் புலிகள் இயக்க உறுப்பினர்களை சமூகமயப்படுத்துதல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படு த்துவது தொடர்பில் அரச உயர்மட்டத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகக் கூறினார். வன்னி பல்கலைக்கழகம்

மேலும் வன்னிக்கெனத் தனியான ஒரு பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்ப டுகின்றது. நெலுக்குளத்தில் 150 ஏக்கர் காணியில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் முழுமையான ஒரு தனியான பல்கலைக்கழகமாகும்.

அதுபோல் தாதியர் பயிற்சிக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி என்பவற்றை நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த சிவநாதன் கிஷோர் எம்.பீ, கடந்த 33 வருட காலமாக சொல்லொணாத் துக்கங்களை அனுபவித்த மக்கள் இன்று தெளிவை அடைந்துள்ளார்கள். எனவே, இனியும் வீராவேசம் பேசினால் மக்களின் நிலைமை மேலும் அதளபாதாளத்தைச் சென்றடைந்துவிடும். எமக்குக் கொள்கை உண்டு.

வடக்கு, கிழக்கிற்கு ஓர் அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்றும் உறுதியாக உள்ளோம். அதற்கான முழு ஆதரவையும் பெற்றுக் கொடுப்பேன். போராட்டம் நடந்த காலத்தில் அதற்கு வலுச்சேர்க்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்தோம். இன்று நிலைமை மாறிவிட்டது. பசியில் வாடிக் கொண்டிருப்பவர்களுடன் தமிஸழத்தைப் பற்றிப் பேச முடியாது என்றும் கிஷோர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக