10 மார்ச், 2010

ரூ. 31.5 மில். பெறுமதியான சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் சிக்கின




தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களும் கண்டுபிடிப்பு

சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 31.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் வகைகளை சுங்கத் திணைக்களத்தினர் கைப்பற்றியுள் ளனர்.

மத்திய கிழக்கில் தொழில் புரியும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பொதிகள் போன்று வெவ்வேறு விலாசங்கள் ஒட்டப்பட்ட 12 பலகைப் பெட்டிகள் கடந்த சில மாதங்களாக சுங்கத் திணைக்களத்தில் வைக்கப்பட்டி ருந்தன.


படம்: சுமணச்சந்திர ஆரியவன்ச

உரிமைகோராத நிலையில் கிடந்த பெட்டிகள் தொடர்பாக குறிப்பிடப்பட்ட பெயர், விலாசங்கள் குறித்து ஆராய்ந்த போது அவை போலியானவை என கண்டு பிடிக்கப்பட்டன.

சுங்கத் திணைக்களத்தினர் பெட்டிகளை திறந்தபோது அவற்றில் 4.2 மில்லியன் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தமை கண்டுபிடித்துள்ளனர். இலங்கை நாணயப் படி அவற்றின் பெறுமதி சுமார் 31.5 மில்லியன் ரூபா என்றும், இவை இலங்கைக்குள் சட்ட விரோதமாக கொண்டுவருவதன் ஊடாக 95.5 மில்லியன் ரூபா அரசுக்கு கிடைக்காமல் போகிறது என்றும் சுங்கத் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று இலங்கைக்குள் பயன் படுத்துவது தடைசெய்யப்பட்ட 650 சீ. சீ. 400 சீசீ மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் சுங்கத் திணைக்களத்தினரால் கைப்பற்றப் பட்டுள்ளன.

முப்படையினருக்கு மட்டுமே பயன்படுத் துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு வகையான மோட்டார் சைக்கிள்களும் துண்டு துண்டாக உதிரிப்பாகங்கள் பிரிக்கப்பட்டு பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் கொண்டுவரப்ப ட்டிருந்தன. இவை இரண்டும் சுங்கத் திணைக்களத்தினரால் மீண்டும் பொருத்தப்ப ட்டுள்ளன.

இவ்விரண்டு மோட்டார் சைக்கிள்களு டன் உரிமை கோரப்படாத நிலையில் மேலும் சில மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. அவை சுங்கத் திணைக்களத்தின ரால் டெண்டர் மூலம் விற்பனைக்கு விடப்படவுள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள 4.2 மில்லியன் சிகரெட்டுகளை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களும் அவற்றின் பெறுமதியும் வருமாறு,

யமஹா - 650 சீ. சீ. மி 5,00,000/-

ஹொண்டா சீபி மி 400 சீ. சீ. மி 5,25,000/-

ஹொண்டா - 50 சீ. சீ. மி 1,25,000/-

ஹொண்டா - 50 சீ. சீ. மி 1,25,000/-

யமஹா - டிடீஆர் - 250 சீ. சீ மி 1,40,000/-

சுசூகி - 50 மி சீ. சீ. மி 35,000/-

யமஹா - 100 சீ. சீ. மி 75,000/-

பீச் பைக் 50 சீ. சீ. மி 65,000/-

பசொல் டீ மி 17,000/-

பசொல் டீ - 17,000/-

சுங்கத் திணைக்களத்தில் உதவி சுங்கப் பணிப்பாளர் ஜயந்த பொன்னம்பெரும, சுங்கத் அதிகாரிகளான ஆர். பி ஹேவாகம, எல். என். ஜயசேக்கர, பீ. எஸ். மானவடு, கே. ஏ. ஏ. பி. கஹந்தவ, எஸ். பி. ஆர். சேனாரட்ண, என். பள்ளியகுரு உட்பட சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கொழும்பு, புளூமெண்டால் வீதியிலுள்ள சுங்கத் திணைக்களத்தின் இறங்கு துறையில் நேற்று ஊடகங்களுக்கு மேற்படி சட்டவிரோத சிகரெட், மோட்டார் சைக்கிள் என்பவற்றை காண்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக