ஐ.நா: இலங்கையில் வல்லுனர் குழுவை அமைத்து மனித உரிமை மீறல் நடந்ததா, இல்லையா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளித்தால் தான் ராஜபக்ஷே அரசு சொல்வதை நம்பமுடியும் என, ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன் கண்டிப்புடன் கூறினார்.
இலங்கையில் கடந்த ஆண்டு புலிகளுடனான சண்டை முடிவுக்கு வந்தது. புலித் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் பலர் அரசு படைகளிடம் சரணடைந்தனர். இச்சண்டையின் போது சரணடைய வந்த ஆயிரக்கணக்கானவர்களை இலங்கை படையினர் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது. புலிகளுடன் சண்டை முடிந்த பின் அகதிகள் முகாமில் தங்கியுள்ள லட்சக்கணக்கில் வாழும் தமிழர்களின் நிலையை ஆராய்வதற்காக ஐ.நா., பொதுச் செயலர் கொழும்பு வந்தார். தமிழ் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டார். சர்வதேச மனித உரிமை அமைப்பின் விதிமுறைகளை பின்பற்றும் படி அதிபர் ராஜபக்ஷேவை, ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன் அப்போது கேட்டு கொண்டார். இருப்பினும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் தொடர்வதாக செய்திகள் வெளியாயின. எனவே, இது குறித்து ஒரு குழுவை அமைத்து விசாரிக்கும் படி பான்-கி-மூன் கேட்டு கொண்டார். இதற்கு, ராஜபக்ஷே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
"கடந்த மே மாதம் இலங்கையில் சண்டை முடிந்த பிறகு ராஜபக்ஷே, என்னுடன் சேர்ந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அவர் பல உறுதி மொழிகளை அளித்தார். ஆனால், இந்த உறுதி மொழியில் பாதிக்கும் விஷயங்கள் குறித்து இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. "முக்கிய வல்லுனர்களை கொண்ட குழுவை அமைத்து மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்தால் தான் ராஜபக்ஷே சொல்வது போல மனித உரிமை மீறல் ஏதும் நடக்கவில்லை என்பதை, நாங்கள் நம்ப முடியும். "எனவே, இந்த குழுவை அமைப்பது குறித்து ராஜபக்ஷேவுடன் பேச்சு நடத்துவதற்காக ஐ.நா., அரசியல் விவகாரத்துறை செயலர் லியான் பொஸ்கோவை விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன்' என, பான்-கி-மூன் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக