10 மார்ச், 2010

சதி கும்பல் தூண்டுதலால் சாமியாரை படம் பிடித்த ஆசிரம சீடர் லெனின்



சதி கும்பல் தூண்டுதலால் சாமியாரை படம் பிடித்த ஆசிரம சீடர் லெனின் முக்கிய பிரமுகரிடம் தஞ்சம்; சென்னையில் ரகசிய இடத்தில் சிறைவைப்பு?

சதி கும்பல் தூண்டுதலால் சாமியாரை படம் பிடித்த ஆசிரம சீடர் லெனின் முக்கிய பிரமுகரிடம் தஞ்சம்; சென்னையில் ரகசிய இடத்தில் சிறைவைப்பு?
திரைப்படம் திரைப்படம்
சென்னை மார்ச். 10-

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா ஒன்றாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில் நம்பிக்கைக்குரிய சீடராக இருந்த லெனின் ரகசியமாக படுக்கை அறை காட்சிகளை படம் பிடித்தது வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து லெனின் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார். பின்னர் நித்யானந்தா மீது பரபரப்பான புகார் ஒன்றையும் தெரிவித்தார். இது தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நித்யானந்தாவின் படுக்கை அறையில் அவருக்கு தெரியாமல் காமிராவை பொருத்தி ஆபாச படம் எடுத்த லெனின் சட்டப்படி குற்றவாளி என்று ஆசிரம நிர்வாகிகள் கூறி வருகிறார்கள்.

அதே நேரத்தில் காந்தப்படுக்கை மோசடியிலும் லெனினுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக லெனின் கலக்க மடைந்துள்ளார். ஏதாவது ஒரு ரூபத்தில் தன் மீது வழக்கு பாய்ந்து விடுமோ என்ற அச்சம் லெனினுக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் இருந்து தப்புவதற்காக சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரின் வீட்டில் லெனின் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த முக்கிய பிரமுர்கள்தான் லெனினை ஆட்டுவித்துக் கொண்டிருப்பதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. தனி அறையில் யார் கண்ணிலும் படாத அளவுக்கு லெனின் முக்கிய பிரமுகர் வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நித்யானந்தாவை ஆபாசமாக படம் எடுத்த பின்னர் அதனை காட்டி லெனின் கோடிக்கணக்கில் பேரம் பேசியதாக தெரிகிறது. ஆனால் பெங்களூர் ஆசிரம நிர்வாகிகள் இதற்கு ஒத்துப்போகவில்லை. இதன் பிறகே ஆபாச சிடி.க்களுடன் லெனின் சென்னைக்கு புறப்பட்டு வந்து முக்கிய பிரமுகரை அவரது வீட்டில் சந்தித்துள்ளார்.

அப்போது சி.டி.யை யார்-யாருக்கு முதலில் கொடுக்க வேண்டும் அதை வைத்து அடுத்தடுத்து எப்படி காய்களை நகர்த்த வேண்டும் என்று அப்போது சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் நித்யானந்தருக்கு எதிரான இத்தனை சம்பவங்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. என்கிறார் ஆசிரமத்தில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவர்.

இது தொடர்பாக அவர் கூறும் போது லெனினை ஒரு கும்பல் விலை கொடுத்து வாங்கியுள்ளது. இதனால் தான் சாமியாருக்கு எதிராக லெனின் செயல்பட்டு வருகிறார்.

இதற்கெல்லாம் ஒரு நாள் லெனின் பதில் சொல்லியே தீர வேண்டும். இன்னும் சில நாட்களில் நித்யானந்தா நேரில் வந்து குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் விளக்கம் அளிப்பார் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக