10 மார்ச், 2010

ஜீ.எஸ்.பி. பிளஸ் குறித்தும் ஏனைய விடயங்கள் குறித்தும்பேச்சுவார்த்தைகளை நடத்த


ஜீ.எஸ்.பி. பிளஸ் குறித்தும் ஏனைய விடயங்கள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்வரும் வாரத்தில் இலங்கை குழுவொன்று பிரஸெல்ஸ் செல்லவுள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை ஊடகங்களுக்கு அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்து கூறுகையில்,

ஜனாதிபதித் தேர்தலின்போது அரசாங்கம் 16 மாவட்டங்களில் வெற்றி பெற்றது. தற்போது நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மேலும் இரண்டு இல்லது மூன்று மாவட்டங்களில் வெற்றிபெறக் கூடிய சாத்தியம் உள்ளது.

அதன்படி மூன்றில் இரண்டு அதிகப்பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்புக்கள் பெருமளவில் அரசாங்கத்துக்கு உள்ளது.

புலிகள் இயக்கம் ஓய்ந்த போதும் புலிகளுக்கு சாதகமான குரல்களும் அந்த நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புக்களும் இன்னும் ஓயவில்லை என்பது மக்கள் மனங்களுக்கு நன்கு தெரியும்.

எனவே உறுதியான சக்திமிக்க ஒரு அரசாங்கத்தை ஜனாதிபதிக்கு ஏற்படுத்திக் கொடுக்க மக்கள் பாரிய ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக