10 மார்ச், 2010

அதிக விலைக்கு அரிசியை விற்கும் வர்த்தகர்க நிலையங்கள் இன்று முற்றுகை:பந்துல


அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிக விலைக்கு அரிசியை விற்கும் வர்த்தகர்களைத் தேடிக்கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

"முன்வரும் பண்டிகைக் காலங்களில் பொது மக்களுக்கு தாராளமாக அரிசி கிடைக்கக் கூடிய சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்துள்ளது. இக்கால கட்டத்தில் எவ்வித விலை அதிகரிப்பும் ஏற்பட வழியில்லை.

அரிசியைப் பதுக்குவோர் மற்றும் அதிக விலையில் விற்போர் ஆகியோரைக் கண்டு பிடிக்க நாளை முதல் விசேட நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் எவ்வித அரசியல் பாகுபாடுகளும் காட்டப்படமாட்டாது" என்றும் அவர் கூறினார். _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக