10 மார்ச், 2010

'ரா' மீதான குற்றச்சாட்டுக்கு நிருபமா மறுப்பு



இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்தபோது, இந்திய உளவு அமைப்பான ரா, ராஜபக்ஷவுக்கு எதிராகவும், பொன்சேகாவுக்கு ஆதரவாகவும் செயல்படவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் கூறியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டை சமீபத்தில், இலங்கை அமைச்சர் நந்தன குணதிலக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கடந்த வாரம் இலங்கை சென்று திரும்பிய நிருபமாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,

"உளவுத்துறைக்கு என்று சில வரம்புகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை உளவுத்துறை அதிகாரிகள் நன்கு உணர்ந்தே இருக்கிறார்கள்.

அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும், இந்த வரம்புகளை மீறிச் செயல்பட மாட்டார்கள். இதை நான் சமீபத்தில் இலங்கை சென்றபோது, அதிபர் ராஜபக்ஷவிடமும், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் தெளிவுபடுத்தி இருக்கிறேன்" என்றார்.

அமெரிக்கா பயணம்

இந்நிலையில் இருதரப்பு உயர் தொழில்நுட்ப வர்த்தகம், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்த நிருபமா ராவ், அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்.

எதிர்வரும் 14ஆம் திகதி வாஷிங்டன் செல்லும் நிருபமா அமெரிக்க வர்த்தகத்துறை துணைச் செயலாளர் டென்னிஸ் ஹைடவருடன் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக