10 மார்ச், 2010

ஐரோப். ஆணைக்குழுவிடம் பேச்சு நடத்த அரச உயர்மட்ட குழு பிரஸல்ஸ் பயணம்




சர்வதேச அரங்கிற்கு உண்மை நிலையை விளக்க நடவடிக்கை

பாங் கீ மூனின் நடவடிக்கை ஐ.நா கொள்கைக்கு முரண்


சர்வதேச அரங்கிற்கு இலங்கையின் உண்மை நிலையை எடுத்துச் செல்லும் வகையில் அரசாங்கம் ஐரோப்பிய ஆணைக் குழுவிடம் உயர்மட்ட பேச்சுவார்த்தை யொன்றை நடத்தவுள்ளது.

இதற்கென அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக் குழுவொன்று எதிர்வரும் 15 ஆந் திகதி திங்கட்கிழமை பிரஸல்ஸ் செல்கின்றது.

இந்தக் குழுவில் நிதியமைச்சின் செயலாளர் பீ. பி. ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க, நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத், சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் இடம்பெறுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஜீ. எஸ். பீ. பிளஸ் சலுகை உட்பட இலங்கை நலன் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து ஐரோப்பிய ஆணைக் குழுவுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுமென அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) முற்பகல் நடைபெற்ற செய்தியா ளர் மாநாட்டில் பேரா சிரியர் பீரிஸ் தெரி வித்தார்.

வெளிநாடுகளின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வ தற்காக இலங்கையின் நலன் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாததென்று கூறிய அமைச்சர் பீரிஸ் இதற்கான நிலையானதும், பலமானதுமான ஓர் அரசாங்கம் இருக்க வேண்டுமென்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலண்டனில் நடந்த சர்வதேச தமிழர் அமைப்பின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலி பாண்ட் கலந்துகொண்டுள்ளார். இந்த மாநாட்டில் எமது நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் முதலாவது : எமது இராணுவ அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவது, இரண்டாவது : இலங்கை உற்பத்திப் பொருள்களைப் பகிஷ்கரிப்பது, மூன்றாவது : சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது.

போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். நாடு கடந்த எல். ரி. ரி. ஈ. அரசாங்கத்தை அமைப்பதற்கு கூறியுள்ளார்கள். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஆராயவென மூவர்கொண்ட நிபுணர்களை நியமிக்கப் போவதாகக் கூறுகிறார்.

இது எந்த வகையிலும் நியாயமானதல்லபீ என்று குறிப்பிட்ட பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பான் கீ மூன் மேற்கொள்ள உத்தேசித்துள்ள நடவடிக்கையானது முற்றிலும் ஐ. நா. சபையின் கொள்கைகளை மீறும் செயலாகுமென்று சுட்டிக்காட்டினார்.பீ சில மாதங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாடு, ஐ. நா. பாதுகாப்புச் சபை ஆகியவற்றில் இலங்கைக்குச் சார்பாக பல நாடுகள் குரல் எழுப்பியிருந்தன.

அவ்வாறு இலங்கையின் உண்மை நிலவரத்தை அறிந்த நாடுகள் கூட தலையிட முடியாதவாறு செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அலுவலகத்துடன் மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டதான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள அவர் முயற்சிப்பது ஐ. நா. சாசனத்திற்கு விரோதமானதாகும். சர்வதேசத்துடன் நல்லுறவைப் பேணுவதற்குத் தயார்.

ஒரு சவாலை வென்றுள்ள நாட்டுக்கு, பொருளாதார சவாலையும் வெல்ல வேண்டியுள்ளது. இதற்கு சர்வதேச நாடுகள் இடமளிக்க வேண்டும். அதேநேரம், அந்த நாடுகளின் அரசியல் இலாபத்திற்காக எமது நாட்டின் நலன் பாதிக்க இடமளிக்க முடியாது. வாக்குகளைப் பெறவும் தேர்தலுக்கு நிதியைப் பெற் றுக்கொள்ள நமது நாட்டைப் பலிகொடுக்க முடியாது. இதனைக் கருதிற்கொண்டுதான் ஐரோப்பிய ஆணைக் குழுவுடன் பேச்சு நடித்த அரசாங்கம் தீர்மானித்ததென்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஷ பல்பிட்டவும் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் மேலும் தகவல் வழங்கிய அமைச்சர், பிஎதிர்க் கட்சி தொடர்பாக ஜனாதிபதி தேர்தலின் போது நாம் தெரிவித்த கருத்துகள் இன்று நிரூபணமாகியுள்ளன. எதிர்க் கட்சிக் கூட்டு இன்று மூன்று பிரிவுகளாகியுள்ளது.

அவர்கள் அதிகாரத்திற்கு வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! இந்தத் தேர்தலில் அரசாங்கம் வெல்லும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எதிர்க்கட்சி வெல்லும் நோக்கத்திலோ, அரசாங்கத்தினை அமைக்கும் நோக்கத்திலோ தேர்தலில் போட்டியிடவில்லை. அர சாங்கத்திற்கு மூன்றில் இரண்டு கிடைப் பதைத் தடுக்கவே முயற்சிக்கின்றது.

ஆனால், அரசாங்கத்திற்குப் பூரண ஆத ரவை வழங்கி மூன்றிலிரண்டு பெரும் பான்மையைப் பெற்றுக் கொடுப்பதென மக்கள் தீர்மானித்து விட்டார்கள். புலிகள் இயக்கம் இராணுவ ரீதியில் தோற்கடிக் கப்பட்டாலும் வெளிநாடுகளில் அச்சுறுத்தல் இன்னமும் உள்ளதை மக்கள் புரிந்து கொண்டார்கள்பீ என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக