1 ஏப்ரல், 2011

வவுனியா ரயில் பஸ்ஸஞுடன் மோதி கோர விபத்து






மாத்தறையிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற ரஜரட்ட ரெஜின கடுகதி ரயிலுடன் பஸ்ஸொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று பகல் 1.55 க்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ‘ரஜரட்ட ரெஜின’ கடுகதி ரயில் ராகம ரயில் நிலைத்திலிருந்து மூன்றாவது ரயில் நிலையமான பட்டுவத்த ரயில் நிலையத்தை அண்மித்த போது தனியார் பஸ் வண்டியொன்று இடதுபக்கமாக வந்து ரயில் பாதை மத்தியில் நின்றுள்ளது.

ரயில் நிலையத்தின் பயணிகள் நடை மேடையை அண்டியதாக அமைந்திருந்த வீதியூடாகவே இந்த பஸ் வண்டி வந்துள்ளது.

வேகமாக வந்த ரயில் பஸ்ஸை மோதி தள்ளியதுடன் பயணிகள் மேடையூடாக இழுத்துச்சென்றுள்ளது. ரயில் நிலையத்தை தாண்டி வெகு தூரம் பஸ் இழுத்துச் செல்லப்பட்ட போது சிதைந்த பஸ் வண்டி ரயிலின் வலப்பக்கமாக திரும்பியதால் தண்டவாளத்தில் இறுகி நின்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட எமது வவுனியா செய்தியாளர் பந்துல செனவிரட்ண தெரிவித்தார்.

அலுவலக கடமை நிமித்தம் கொழும்புக்கு வந்து வவுனியா செல்வதற்காக எமது செய்தியாளர் அதே ரயிலில் பயணித்துள்ளார். விபத்து நடைபெற்றபோது பஸ் வண்டியினுள் பயணிகள் மூவர் மட்டுமே இருந்துள்ளனர்.

விபத்து காரணமாக பயணிகள் மூவரும் சாரதியும் காயத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான தனியார் பஸ் மீண்டும் பாவனைக்கு எடுக்க முடியாதவாறு சேதமடைந்துள்ளதையும் ரயிலையும் படத்தில் காண்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக