16 பிப்ரவரி, 2011

புலிகளே கப்பலில் ஆட்களை கடத்துவதில் ஈடுபடுகின்றனர்



புலிகள் போரில் தோற்றதன் பின்னர் கப்பலில் ஆட்களைக் கடத்துவதைப் பிரதானமான தொழிலாகக் கொண்டுள்ளதாகவும் கனடாவிலுள்ளவர்களுக்கும் இந்நடவடிக்கையில் தொடர்புண்டு எனத்தான் நம்புவதாகவும் கனடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி "நசனல்போஸ்ற்' என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பல் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஆகக்குறைந்தது நான்கு பரிமாற்று இடங்கள் இருந்திருக்கலாம் என்றும் இலங்கையின் வடக்கிற்கு ஆயுதக் கடத்தலை மேற்கொள்ளவென வடிவமைக்கப்பட்ட அனுபவம் பெற்ற இந்தக் கடத்தல் வழிகளால் இப்போது அவர்கள் ஆட்களைக் கடத்துகிறார்கள் என்று தெரிவித்த அமைச்சர், கனடாவிலுள்ளவர்களின் துணையுடனே இக்கடத்தல் நடைபெறுகிறது என்பதை அனுமானிப்பதற்கான சான்றுகள் இருப்பதாகவும் இந்தக் கடத்தல்காரர்கள் மேற்படி பயணிகள் ஒவ்வொருவரும் பயண முடிவில் கொடுக்க வேண்டிய மீதத் தொகை யான 40ஆயிரம் டொலர்களை கனடாவில் வசூலிப்பதற்கு உரியவர்கள் கனடாவில் இருக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

இறுதியாக வந்த "சண் சீ' கப்பலில் குறிப்பிடக்கூடியளவு தொகையினர் பயங்கரவாத சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் என்றும் கனடாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என்றும் மேற்படிஅமைச்சர் தெரிவித் துள்ளார்.

கனடியப் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் இன்னமும் இக்கப்பல் விவகாரம் தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை. அதேவேளை, இக்கப்பல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் இருவரை மேற்படி பத்திரிகை தொடர்பு கொண்ட போதும் அவர்கள் தங்களது விசாரணைகள் சம்பந்தமான விடயங்களை பகிர விரும்பவில்øலை. இதேவேளை இவ் அகதிகளை தடுத்து வைத்துப் பராமரிப்பதற்கென இதுவரை 18 மில்லியன் கனடிய டொலர்களை கனடிய அரசாங்கம் செலவு செய்துள்ளது எனவும் தற்போது 107 பேர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் உள்ளதாகவும் தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக