16 பிப்ரவரி, 2011

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு





வெள்ளத்தால் தொழில் வாய்ப்பு இழந்தவர் ஒருவர்இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் "பணத்திற்காக வேலை" என்ற வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆரம்பித்துள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனரமைப்பு செய்வதையும் நோக்கமாகக் கொண்டதாக இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று கூறுகின்றது.

இத்திட்டத்தின் கீழ் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பமொன்றைச் சேர்ந்த ஒருவருக்கு நாளொன்றிற்கு ரூ.500 என்ற அடிப்படையில் தொழில் வாயப்பு வழங்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் இரண்டு மாத காலத்திற்கு இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக தெரிகிறது.

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் சேதமடைந்த உள்-வீதிகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் போன்றவற்றின் புனரமைப்பு பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவதாக கூறும் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப இத்திட்டம் உறுதுணையாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக