2 டிசம்பர், 2010

பிரிட்டன் வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சரின் ராஜதந்திரம் பரகசியம்



பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் வாக்குகளைத் தேர்தலில் பெறுகின்றமைக்காகவே பிரிட்டன் வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் டேவிட் மில்பார்ண்ட் தமிழர்களின் பாதுகாவலரைப் போல் நடந்து கொண்டார் என்று ராஜதந்திரிகள் நம்புகின்றனர் என்று விக்கிலீக்ஸ் இணையத் தளம் பரகசியப்படுத்தி உள்ளது.

இலங்கையில் கடந்த வருட யுத்தத்தின்போது இடம்பெற்றன என்று கூறப்படும் மனிதப் பேரழிவுகள் குறித்து அதிகம் இவர் அதிகம் பேசி வந்தமைக்கு இதுவே காரணம் என்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு கடந்த வருடம் மே மாதம் அனுப்பி வைக்கப்பட்ட ராஜதந்திர பொதியில் இருந்த அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.

பிரித்தானிய வெளியுறவு அமைச்சில் இலங்கை விவகாரங்களுக்கு பொறுப்பானவராக கடமையாற்றிய டிம் வெயிட் (Tim Waite) உயரதிகாரியை மேற்கோள் காட்டி இது குறிப்பிடப்பட்டு இருந்தது. "பிரித்தானிய அமைச்சர்கள் பிரிட்டனில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாக்குகளைப் பெறவே இலங்கை விவகாரத்தில் மிகுந்த கவனம் செலுத்தினர்.

சுமார் 3 இலட்சம் இலங்கைத் தமிழர்கள் பிரிட்டனில் உள்ளனர். இத் தமிழர்கள் ஏப்ரல்-06 ஆம் திகதி பிரிட்டன் நாடாளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்." இவ்வாறும் அவ்வதிகாரி தெரிவித்து இருந்தார் என்று அறிக்கையில் உள்ளது. லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்களில் ஒருவரான ரிச்சர்ட் மில்ஸ் என்பவர் டிம் வெயிட் ஐ மேற்கோள்காட்டி அறிக்கையை தயாரித்து இருக்கின்றார்.

அப்போது தமிழர்களின் ஒற்றுமையை புரிந்து கொண்ட டேவிட் மில்லிபான்ட் வெளியுறவு அமைச்சராக இருந்ததால் தமிழர்களின் வாக்குகள் முழுவதும் எதிர்வரும் தேர்தலில் தனக்கு கிடைக்க வேண்டும் எனக் கருதியே இந்த பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய 60 % பணி நேரத்தை இதற்காக செலவிட்டார் எனவும் அந்த அதிகாரி அமெரிக்காவிடம் கூறியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக