நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சந்தேகநபரொருவர் குண்டொன்றை வெடிக்க வைத்ததில் சந்தேக நபர் கொல்லப்பட்டதோடு 12 பொலிஸாரும் இரு சிவிலியன்களும் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் தீவிர சிகிச்சைப் பிரிவில்அனுமதிக்கப்பட்டு ள்ளார். இதேநேரம் படுகாயமடைந்த போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி மேலதிக சிகிச்சைக்காக கண்டிக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் சம்ப வம் நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:-
கஞ்சா போதைப் பொருள் பாவனையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபர் அங்கு சுற்றிவளைத்து நின்ற பொலிஸார் மீது கைக்குண்டை வீசியுள்ளார்.
கைக்குண்டை வீசிய சந்தேக நபர் முன்னர் இராணுவத்திலிருந்து தப்பி வந்தவரென ஆரம்பகட்ட விசாரணைகளிலி ருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக