27 நவம்பர், 2010

கிளிவெட்டி நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் மழையால் பாதிப்பு

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து கிளிவெட்டி உள்ளிட்ட நலன்புரி முகாம்களில் வசித்து வரும் இடம்பெயர்ந்த மக்கள் மழை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளாகி வருகின்றனர்.

மழை காரணமாக கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைபறிச்சான் ஆகிய இடங்களில் உள்ள நலன்புரி நிலைய மக்களே இவ்வாறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கிளிவெட்டியில் 570 குடும்பங்களும், மணற்சேனையில் 90 குடும்பங்களும், பட்டித்திடலில் 230 குடும்பங்களும், கட்டைபறிச்சானில் 372 குடும்பங்கள் தங்கியுள்ளன.

இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்கள் ஒரளவு தொழில் மற்றும் முயற்சிகளில் ஈடுபடும் நிலையில் பாதிக்கப்பட்ட இம்மக்கள் தொடர்ந்து நலன் புரிநிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக உணவுத்திட்டம் தவிர வேறு எந்த ஆதாரமும் இன்றி வாழும் இம்மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ள போதும் இதுவரை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என இங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மூதூர் கிழக்கில் உள்ள சம்பூரில் அனல் மின்னிலயம் அமைக்கும் இடம் தவிர்ந்த சம்பூர் கூனித்தீவு கிராமங்களின் பகுதிகளிலாவது மீள்குடியேற அனுமதியுங்கள் என்று மக்கள் கூறிவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக