27 நவம்பர், 2010

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் : மட்டு, மாவட்டத்தில் வாக்களிப்பு ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. 331 பேரை தெரிவு செய்ய ஆயிரத்து 638 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 4 மணிக்கு வாக்களிப்பு நிறைவடையுமென கிழக்கு மாகாண புதிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் கே.தவராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களிலும் 14 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.

வாக்களிப்பதற்கான நேரம் முடிவடைந்தவுடன் குறித்த வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணப்பட்டு இன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கடவுள்ளன.

நாடளாவிய ரீதியில் இத்தேர்தல் மூலமாக 331 பேர் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனவரிமாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக