3 அக்டோபர், 2010

தமிழ் மக்கள் கௌரவத்துடன் வாழும் பின்னணி மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும்:ரொபர்ட் பிளெக்

தமிழ்மக்கள் சுய கௌரவத்துடன் வாழக் கூடிய ஒரு பின்னணியை உருவாக்கி, அதன் மூலம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதன் மூலம் மட்டும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியாதென தென், மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் கூறியுள்ளார்.

சன்டியாகோவில் நடைபெற்ற உலகப் பொருளாதார விவகாரப் பேரவை மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதார நன்மைகளை வழங்குவதன் மூலம் மட்டும் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றிவிட முடியாது. அத்துடன் இலங்கைக்கான நீண்டகால சமாதானம் மற்றும் சுபிட்சத்தையும் அடைய முடியாது. தமிழ் மக்களின் மனிதாபிமான, அரசியல் மற்றும் ஏனைய உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் சுய கௌரவத்துடன் வாழக் கூடிய ஓர் பின்னணியை உருவாக்குவதன் மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும். யுத்தம் காரணமாக இடம்பெயர் முகாம்களில் தங்கியிருந்த 3 இலட் சம் பேரில் அநேகமானவர்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். தமிழர் பிரதேச மற்றும் மாகாணசபைத் தேர்தல் களை கூடிய விரைவில் நடத்தி சிவில் நிர்வா கத்தை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும். 30 ஆண்டுகளின் பின் னர் சுதந்திரமான அரசியல் தலைமைகள் உரு வாவதற்கு இது நல்லதொரு சந்தர்ப்பமாகும்

நிலையான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், நிஜமான நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக யுத்தக் குற் றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவா ளிகளுக்குத் தண்டனை விதிக்கப்படவும் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள உண் மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நட வடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியன. சர்வதேச மானிதாபிமான சட்டங்களை மீறிய வர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பல்லின ஜனநாயகத்தை நாட்டில் கட்டியெழுப்ப வேண்டியது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடமையாகும் எனவும் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக அமெரிக்கா இதுவரையில் 89 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ள தெனவும் வடக்கில் வாழும் மக்களின் வாழ் வாதாரத்தை அபிவிருத்தி செய்யும் முகமாக தனியார்துறை பங்காளித்துவம் மற்றும் விவசாய அபிவிருத்திக்கு 25 மில்லியன் டொலர்களையும் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக