3 அக்டோபர், 2010

பிள்ளைகளை பாடசாலை அனுப்பாத பெற்றோர் மீது கடும் நடவடிக்கை

பாடசாலைகளுக்கு அனுமதி பெறும் வயதையுடைய சகல பிள்ளைகளும் கட் டாயமாக பாடசாலைகளுக்கு அனுப் பப்பட வேண்டும். கல்வி கற்பதற்காக தமது பிள் ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோர் மீது சட்ட நட வடிக்கையை எடுக்க அரசாங்கம் ஆயத்தமாக இருக்கிறது என அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் கல்வி கற்பதற்காக பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகள் இருப்பின் அவர் கள் பற்றிய விபரங்களை அப் பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகர் சேகரித்து அதற்கான காரணத்தை கண்டறிந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு செயற்படாத கிராம சேவகர் கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பாடசாலைக்கு செல்லும் வயதுடைய பிள்ளைகள் சுமார் 2,50,000 பேர் வரையில் பாடசாலைகளுக்கு செல்லாமல் உள்ளனர் என்பதும் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

புள்ளி விபரங்கள் திணைக்களம் இந்த கணக்கெடுப்பை செய்திருந்தது. இந்த கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக தமக்கு அறிக்கை யொன்றை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனோடு தொடர்பு டைய அதிகாரிகளுக்கும் அண்மையில் பணிப்புரை களை விடுத்திருந்தமையையும் அந்த அதிகாரி நினைவு கூர்ந்தார்.

பாடசாலைக்கு செல்லாமல் இருக்கும் பிள்ளைகளின் விபரங்கள் பகுதி, பெயர், விலாசம் என்பவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், அவர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் தடுத்து நிறுத் தும் பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்படவுள்ளது.

சகலருக்கும் இலவசக் கல்வி என்ற அடிப்படையில் சகல பிள்ளைகளும் கட்டாயக் கல்விக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையிலும் எதிர்கால சந்ததியினர் கல்வியில் சிறந்து விளங்குபவர்களாகவும் நாட்டின் எதிர்காலத்தை ஏற்று நடத்தவுள்ள வர்கள் என்பதாலும் மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக