3 அக்டோபர், 2010

பொன்சேகா முறைப்படி மன்னிப்பு கோரினால் கவனம் செலுத்தப்படும் - ஜனாதிபதி







சரத் பொன்சேகாவிற்கு எதிரான தீர்ப்பினைத் தாம் ஏற்றுக்கொண்டமை தனிப்பட்ட பழிவாங்கலல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தாமே நியமித்த இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை தாமே ஏற்காவிட்டால் அந்த நீதிமன்றக் கட்டமைப்பிற்கே பங்கம் ஏற்படுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சரத்பொன்சேகாவிற்கு மன்னிப்பளித்தல் சம்பந்தமாக முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அப்போது அது விடயத்தில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

பொலன்னறுவையில் பெளத்த மதத் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பில் (நேற்று முன்தினம்) கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இது நிதி மோசடி சம்பந்தமான குற்றமாகும். “என்னைக் கொலை செய்வதாகக் கூறிய போதும் நான் அது சம்பந்தமாக ஒரு வார்த்தையேனும் பேசவில்லை” எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் மன்னிப்பளிக்க முடியுமென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப முறைப்படி செயற்பட்டால் அது தொடர்பில் கவனத்திற்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடமத்திய மாகாண பெளத்த மதத் தலைவர்களுக்கான விசேட நிகழ்வொன்று நேற்று முன்தினம் மாலை பொலன்னறுவை ‘சுது அரலிய’ ஹோட்டலில் நடைபெற்றது. அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, பந்துல குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த பெளத்த மதத் தலைவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இராணுவ நீதிமன்றத்தில் இத்தீர்ப்பு ஒன்றும் புதியதல்ல. இந்த நீதிமன்றத்தின் மூலம் சுமார் 8000 பேர் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

பெளத்த மதத் தலைவர் ஒருவர் இங்கு கருத்துத் தெரிவிக்கும் போது, தமது மாவட்டத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்திக்கொண்டிருக் கும் போது சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு மிகச் சரியானது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 30 வருடங்கள் ஆயினும் நல்லாட்சி புரிய வேண்டுமெனவும் குறிப்பிட்டார். அதனையடுத்தே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெளிவுபடுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக